பீகார் பெண்ணுடன் பிரபுதேவாவுக்கு நடந்த திருமணம்.. ஜெயந்தி கண்ணப்பன் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு லாக்டவுனில் நடிகர் பிரபுதேவா பீகார் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கும் பீகாரை சேர்ந்த ஹிமானி சிங் என்பவருடன் நடந்த திருமணம் பற்றி உறுதி செய்துள்ளார் ஜெயந்தி கண்ணப்பன்.

தமிழ் பிலிமிபீட்டுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் பிரபுதேவாவுக்கும் ரமலத்துக்கும் நடைபெற்ற திருமணம் பற்றியும், ஹிமானி சிங்குடன் அவருக்கு நடந்த திருமணம் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடனம், நடிப்பு, இயக்கம்

நடனம், நடிப்பு, இயக்கம்

நடனம், நடிப்பு, இயக்கம் என இந்தியா முழுவதும் இன்னமும் அசத்தி வருகிறார் நடிகர் பிரபுதேவா. இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிரபுதேவாவின் நடிப்பில் சமீபத்தில் மைடியர் பூதம் திரைப்படம் வெளியாகி குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. பஹீரா, வினோதன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

முதல் மனைவி

முதல் மனைவி

பிரபுதேவா தனது டான்ஸ் ட்ரூப்பில் டான்ஸராக பணியாற்றி வந்த ரமலத் என்பவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2011ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வரும் ஜெயந்தி கண்ணப்பன் முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டதும் தன்னிடம் வந்தது பற்றியும் அவருக்கு கடந்த 2020ல் நடந்த திருமணம் பற்றியும் ஏகப்பட்ட விஷயங்களை பேசியுள்ளார்.

என்னிடம் தான் வந்து நின்றார்

ரமலத் எனும் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறேன் என இதே இடத்தில் இரவு நேரத்தில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு என்னிடம் தான் வந்து நின்றார் பிரபுதேவா என பேசியுள்ளார். குஷ்பு நடனமாடிய எட்டுப்பட்டி ராசா பாட்டில் ரமலத் முதல் வரிசையில் நின்று நடனமாடியிருப்பார். சிறப்பான நடனக் கலைஞர் அவர், என பாராட்டி பேசியுள்ளார்.

பீகார் பெண்ணுடன் திருமணம்

பீகார் பெண்ணுடன் திருமணம்

வில்லு படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாராவை காதலித்து வந்த பிரபுதேவா, திருமணம் வரை சென்ற நிலையில், கடைசி நேரத்தில் அவரது திருமணத்துக்கு ரமலத் தடையாக நின்று பிரச்சனை செய்தார். இந்நிலையில், லாக்டவுன் சமயத்தில் கடந்த 2020ம் ஆண்டு பீகாரை சேர்ந்த டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு பிரபுதேவா வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அது உண்மை தான் என ஜெயந்தி கண்ணப்பன் தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X