»   »  ரஜினி படத் தலைப்புகளைத் தேர்வு செய்வது ஏன்?- தனுஷ்

ரஜினி படத் தலைப்புகளைத் தேர்வு செய்வது ஏன்?- தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படத் தலைப்புகள் என் படங்களுக்கு தானாகவே அமைந்து விடுகின்றன என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தொடர்ந்து தன் படங்களுக்கு ரஜினி படத் தலைப்புகளையே பயன்படுத்தி வருகிறார். ரஜினியின் மருமகன் என்ற உரிமையில் இப்படி அவர் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Why I'm selecting Rajini titles? - Dhanush's explanation

இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் கேட்ட கேள்விக்குத்தான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனுஷ் அளித்துள்ள பதில்கள்...

கேள்வி: விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?

பதில்: இருவரையும் பிடிக்கும். அவர்களிடம் நான் நிறைய கற்று வருகிறேன். உண்மையைச் சொல்லணும்னா, நான் ரஜினியின் தீவிர ரசிகன்.

கேள்வி: சூர்யா?

பதில்: கடுமையான உழைப்பாளி. இருவடைய உழைப்பு மற்றவர்களுக்கு ஊக்குவிப்பது போல் இருக்கும்.

கேள்வி: சமந்தா?

பதில்: மிக திறமையான நடிகை. அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கேள்வி: தங்கமகன் இசை வெளியீடு?

பதில்: இப்படத்தின் இசைக்காகதான் தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறோம். நவம்பர் மாதம் வெளியாகும். மெலோடி பிரியர்களுக்கு இப்படத்தின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.

கேள்வி: விஜய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பீர்களா?

பதில்: விஜய் கேட்டா கண்டிப்பாக நடிப்பேன்.

கேள்வி: விஜய், அஜித் படங்களை தயாரிப்பீர்களா?

பதில்: அப்படி அமைந்தால் அது பாக்கியம்.

கேள்வி: எப்போது உங்கள் அண்ணன் படத்தில் நடிப்பீர்கள்?

பதில்: கூடிய சீக்கிரம்.

கேள்வி: விஜய் சேதுபதி, நயன்தாரா?

பதில்: விஜய் சேதுபதி திறமையான நடிகர். நயன்தாராவை எல்லோருக்கும் பிடிக்கும்.

கேள்வி: ஏன் ரஜினி படத்தின் தலைப்பையே தேர்வு செய்கிறீர்கள்?

பதில்: நான் தேர்வு செய்யவில்லை. தானாகவே அமைகிறது.

கேள்வி: தமிழ் சினிமாவில் சிறப்பாக நடனமாடக் கூடியவர்?

பதில்: விஜய்

கேள்வி: பள்ளி பருவத்தில் உங்களுக்கு பிடித்த நடிகை?

பதில்: குஷ்பு மற்றும் சிம்ரன்

கேள்வி: விஜய் படங்களில் உங்களுக்கு பிடித்தது?

பதில்: கில்லி

கேள்வி: அஜித் படங்களில் உங்களுக்கு பிடித்தது?

பதில்: தீனா.

Read more about: dhanush தனுஷ்
English summary
In a question & answer session at Twitter, Dhanush says that Rajini's titles are naturally set for his stories.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil