X
போகன்

போகன்

Action | Romance | 02 Feb 2017 | U | 180 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

போகன் கதை

போகன் இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் ஹன்ஷிகா ஆகியோர் நடித்த காதல், அதிரடித் திரைப்படம்.  கதை : மன்னர் பரம்பரையில் பிறந்து கடனில் மூழ்கி நடுத்தெருவுக்கு வருகிறார் அரவிந்த் சாமி. வசதியாக வாழ, மக்களை ஏமாற்றி, கொள்ளையடித்து பணத்தினை சேர்த்து சொகுசாக வாழ ஆரம்பிக்கிறார்.  அரவிந்த் சாமி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து மந்திர ஓலை சுவடியை எடுக்கிறார். அந்த ஓலை சுவடியில் இருக்கும் வித்தையை கற்றுக்கொண்டு கூடு விட்டு கூடு பாயும் வித்தையை கற்றுக்கொண்டு, பல வங்கிகளில் பணத்தினை கொள்ளையடிக்கிறார்.  அவர் கொள்ளையடிக்க பயன்டுத்தப்படும் மனிதர்களில் ஒருவராக நரேன் அரவிந்த் சாமியின் கண்ணில் பட்டுவிட, அவரை பயன்படுத்தி கொள்ளையடிக்கிறார் அர்விந்த் சாமி. நரேனின் மகனாக வரும் ஜெயம் ரவி, தன் தந்தையை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி அரவிந் சாமியை கண்டறிகிறார்.  அரவிந்த் சாமியை ஆதரத்தத்துடன் கைது செய்வதற்காக அவருடன் நண்பராக பழகுகிறார் ரவி. ஆனால், தன்னை பிடிக்க வந்த ரவியின் உடலிலே அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாய்கிறார்.  அதனால், பல ரகளைகள், மற்றும் பல குழப்பங்கள் உருவாகின்றன. ரவியின் உடலை விட்டு அரவிந்த் சாமி எவ்வாறு வெளிவந்தார். ரவி அவரை கைது செய்தாரா ? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. 
Read More

போகன் நடிகர்கள் & படக்குழுவினர்

போகன் அணியின் தகவல்

இயக்குனர் லக்ஷ்மன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

போகன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து 90களில் சின்ன வாத்தியார் என்று ஒரு படம் வந்தது. அதற்கடுத்து வந்துள்ள படம் போகன். ஏழாம் அறிவில் நோக்கு வர்மம் மாதிரி, போகனில் சித்த வர்மம். அர்விந்த்சாமிக்கு டைட்டில் ரோல். அவர்தான் போகன், அனுவித்துச் செய்திருக்கிறார் இந்த வேடத்தை. ஜெயம் ரவிக்கு தன் நடிப்பை வெளிப்படுத்தக் கிடைத்த இன்னொரு நல்ல வாய்ப்பு போகன். குறிப்பாக அரவிந்த்சாமி உடம்புக்குள் போனபிறகு ஜெயம் ரவியின் உடல் மொழியில் ஏற்படும் மாறுதல்கள் மற்றும் அவர் நடந்து கொள்ளும் விதம் பிரமாதம். குறிப்பாக ஹன்சிகாவுடனான அவரது காதல் காட்சிகள் ரொம்பப் புதுசு. ஹன்சிகாவுக்கும் இதில் நல்ல வேடம். குடித்துவிட்டு கலாட்டா செய்யும் காட்சிகளில் கவர்கிறார். கூடு விட்டுக் கூடு பாய்ந்த பிறகு, ஜெயம் ரவி உடம்பில் உள்ள அர்விந்த்சாமியை அவர் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யம். நாசர், பொன்வண்ணன், வருண், நாகேந்திர பிரசாத், அக்ஷரா கவுடா என நடித்த அனைவருமே கச்சிதம். சௌந்திரராஜனின் கேமரா, இமானின் இசை இரண்டும் படத்துக்கு பலம். பாடல்களை விட, பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் இமான். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் டல்லடிப்பதை கவனித்து கத்தரி போட்டிருக்கலாம் இயக்குநரும் எடிட்டரும். பொதுவாக இரண்டாவது படத்தைக் கோட்டை விடுவார்கள் இயக்குநர்கள். ஆனால் லக்ஷ்மன் அதில் ஜெயித்திருக்கிறார். திரைக்கதை, படமாக்கம் இரண்டிலுமே சோடை போகவில்லை.

போகன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

போகன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+