»   »  ஃபுல் டைம் வில்லனாகும் முன்னாள் இயக்குநர்!

ஃபுல் டைம் வில்லனாகும் முன்னாள் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். கதாநாயகனாக நடித்து அதில் அவருக்கு வெற்றி கிடைக்காததால் தற்போது வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

'இறைவி' படம் வெற்றிபெறாவிட்டாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரும்பாலானோரால் பாராட்டப்பட்டதைத் தொடர்ந்து இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Former director to become full time villain

'மாயா' பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவாக்காலம்' படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, விஜய்யின் 'மெர்சல்' படத்தில் வில்லனாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தில் பிரதான வில்லனாகவும் நடித்துள்ளார்.

Former director to become full time villain

'ஸ்பைடர்' படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் பிஸி நடிகராகி உள்ளார். தெலுங்கில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'போகன்' ரீமேக்கில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இப்படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கிறார். அர்விந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

English summary
Director SJ Surya left the film making now and becomes a full-time actor. He has acted as a villain in the films 'Mersal' and 'Spider'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil