»   »  இன்று முதல்.... போகன், எனக்கு வாய்த்த அடிமைகள், சாயா!

இன்று முதல்.... போகன், எனக்கு வாய்த்த அடிமைகள், சாயா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரமும் வெள்ளிக்கிழமைக்கு ஒரு நாள் முன்னதாகவே புதிய படங்களை வெளியிடுகின்றனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

பொதுவாக புதிய படங்களை வெளியிடுவது வெள்ளிக்கிழமைதான். உலகெங்கும் இதுதான் நடைமுறையில் உள்ளது. வார இறுதி, அடுத்தடுத்து இரு தினங்கள் விடுமுறை என்பதால் இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ்.


ஆனால் சமீப காலமாக ஒரு நாள் முன்பாக, அதாவது வியாழக்கிழமையே வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம் முதல் வார ஓபனிங் நான்கு நாட்களுக்கு இருக்குமே என்ற ஆசைதான்.


இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகின்றன. மூன்றுமே இன்றே வெளியாகின்றன.


போகன்

போகன்

ஜெயம் ரவி, அர்விந்தசாமி, ஹன்சிகா நடித்துள்ள போகன் படத்தை, லக்ஷ்மன் இயக்கியுள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார். ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் கூட்டணி என்பதால் ரசிகர்களிடம் ஒரு ஆர்வம் பிறந்துள்ளது. தனி ஒருவனுக்குப் பிறகு அதிக அரங்குகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் இது.


எனக்கு வாய்த்த அடிமைகள்

எனக்கு வாய்த்த அடிமைகள்

ஜெய், ப்ரணிதா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை மகேந்திரன் ராஜமணி இயக்கியுள்ளார். ஷான் சுதர்சன் தயாரித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.


சாயா

சாயா

விஎஸ் பழனிவேலு தயாரித்து இயக்கியுள்ள படம் சாயா. கல்வி வியாபாரத்தை அம்பலப்படுத்தும் இன்னொரு படம். சோனியா அகர்வால், காயத்ரி, சந்தோஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார்.


குங்ஃபூ யோகா

குங்ஃபூ யோகா

ஜாக்கி சானின் புதிய படம் இந்த குங்ஃபூ யோகா. ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்கு நிகராக, தமிழிலேயே நாளை வெளியாகவிருக்கிறது.


English summary
Today there are 3 direct Tamil movies Bogan, Enakku Vaaitha Adimaigal and Saaya releasing all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil