»   »  வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!

வெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

போகன் படம் வெளியான முதல் நாளே, அதன் வெற்றியை கமலா திரையரங்கில் கேக் வெட்டிக் கொண்டாடினார் ஜெயம் ரவியும், படக் குழுவினரும்.

Jayam Ravi celebrates Bogan movie success

அடுத்தடுத்து படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றியை ருசித்து வருகிறார் பிரபுதேவா. அவர் சமீபத்தில் நடித்து, தயாரித்து வெளியிட்ட 'தேவி' வசூல் ரீதியாக வெற்றிப் பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே வெற்றிதான்.


இப்போது பிரபுதேவா தயாரித்துள்ள படம் "போகன்.' 'ரோமியோ ஜூலியட்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லஷ்மண், ஜெயம் ரவி, ஹன்சிகா கூட்டணி இப்படத்திலும் இணைந்துள்ளது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார் அரவிந்த் சாமி.போகன் படம் நேற்று வெளியானது. முதல் நாளன்றே இதன் வெற்றிவிழாக் கொண்டாட்டம் சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. திரையின் முன்பு படக் குழுவுடன் இணைந்து கேக் வெட்டினார் ஜெயம் ரவி. பிறகு படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


"படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் படத்தின் வெற்றி முதல் காட்சி முடிந்த போதே தெரிந்து விடுகிறது. அந்த வகையில் போகன் பெரும் வெற்றி பெற்றுள்ளது," என்றார் ஜெயம் ரவி.

English summary
Jayam Ravi and his Bogan movie crew have celebrated the success of the movie at Kamala Theater.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil