»   »  நல்ல ஓபனிங்குடன் ஜெயம் ரவியின் போகன்! #BoganBoxOfficeHit

நல்ல ஓபனிங்குடன் ஜெயம் ரவியின் போகன்! #BoganBoxOfficeHit

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயம் ரவியின் போகன் படம் வெளியாவதற்கு முன் ஏகப்பட்ட நெகடிவ் செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அந்த செய்திகள் அனைத்தும் பொய்யாகிவிட்டன. படத்துக்கு விமர்சனங்கள் மட்டுமல்ல, கலெக்ஷனும் திருப்தியாக உள்ளதாக தியேட்டர் ரிப்போர்ட்கள் கூறுகின்றன.


ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி நடித்த இந்தப் படம் கடந்த வியாழக்கிழமையன்று 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. எதிர்ப்பார்த்ததை விட நல்ல ஓபனிங் படத்துக்குக் கிடைத்துள்ளது.


படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே பார்த்தவர்களின் பாராட்டுகளைப் பெறும் வகையில் நடித்திருந்தனர். குறிப்பாக ஜெயம் ரவி கலக்கியிருந்தார்.


Bogan starts with good opening

படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே வெற்றி விழாவைக் கொண்டாடினார் ஜெயம் ரவி. அடுத்த நாள் அரவிந்த்சாமி கொண்டாடினார்.


முதல் மூன்று நாள் வசூல் விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை சிங்கம் வெளியாகும் வரை, படத்தின் வசூல் பாதிக்காது என்பதால் நல்ல லாபம் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

English summary
Jayam Ravi's Bogan has taken a very good opening all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil