X
டோரா

டோரா

Thriller | 31 Mar 2017 | A | 137 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

டோரா கதை

டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த த்ரில்லர் திரைப்படம்.  கதை :  மிடில் க்ளாஸ் தம்பி ராமய்யாவின் மகள் நயன்தாரா. மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார். ஒரு நாள் குல தெய்வம் கோயிலுக்குப் போக தன் பணக்கார தங்கையிடம் (கால் டாக்ஸி ஓனர்) கார் கேட்கிறார். தங்கை அவமானப்படுத்துகிறார். இதனால் கால் டாக்ஸி பிஸினஸ் ஆரம்பிக்க ஆசைப்பட்டு, ஒரு பழைய ஆஸ்டின் காரை வாங்குகிறார்கள். அந்தக் காருக்கு ஒரு நாள் கொடைக்கானல் ட்ரிப் கிடைக்கிறது. இந்த ட்ரிப்பின் போது நடக்கும் விபரீதங்களைத் தொடர்ந்து ஒரு சாமியாரை அழைத்து விஷயத்தைச் சொல்ல, காருக்குள் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அது சிலரைப் பழிவாங்கக் காத்திருப்பதாகவும் கூறுகிறார். நாய் யாரைப் பழிவாங்குகிறது.. அதற்கு நயன்தாரா என்ன செய்தார்.. இந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
Read More

டோரா நடிகர்கள் & படக்குழுவினர்

டோரா அணியின் தகவல்

இயக்குனர் தாஸ் ராமசாமி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

டோரா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
பேய்ப் பட சீஸன் ஏகத்துக்கும் டல்லடித்துப் போய், பேய்கள் சினிமாக்காரர்களைக் கண்டு பயப்படும் நேரத்தில் வெளியாகியிருக்கும் படம் டோரா. இனி டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல், லேடி சூப்பர் ஸ்டாராகத் தொடர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது நயன்தாராவுக்கு. இந்தப் படத்தில் ஃபைட், பஞ்ச் வசனம் என தனக்கு அந்நியமான ஏரியாக்களை புகுந்திருக்கிறார். போரடிக்கும் டோராவின் முதல் பாதியில் பெரிய ஆறுதல் தம்பி ராமய்யாவின் காமெடி. ஹரீஷ் உத்தமனுக்கும் நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நிறைய இடங்களில் காலகாலமாகப் பார்த்துப் பழகிய காட்சிகள், வசனங்கள். குறிப்பாக அந்த போலீஸ் அதிகாரி, ஹரீஷைப் பார்த்து அடிக்கடி 'என்ன பண்ற... இன்னுமா கண்டுபிடிக்கல...' எனக் கேட்கும் காட்சி. நயன்தாராவின் அந்த இரட்டை முகக் காட்சியும் புதிதல்ல... சந்திரமுகி, அந்நியனில் பார்த்துப் பழகியதுதான். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் சிறப்பு. விவேக் மெர்வின் பின்னணி இசை சுமார்தான். ஒரே ஒரு பாடல். பரவாயில்லை ரகம். ஆரம்பக் காட்சிகளில் சப்தத்தைக் குறைத்திருக்கலாம்! ஆங்... டோரா யாருன்னு தெரியணுமா... அதான் பேயா வர்ற அந்த நாயோட பேரு! டோரா ஒரு நயன்தாரா படம். அவருக்காக ஒரு முறை பார்க்கலாம்!

டோரா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

டோரா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+