X
தமிழ் » திரைப்படங்கள் » காத்துவாக்குல ரெண்டு காதல்
காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

Comedy | Drama | Romance | 28 Apr 2022 | U/A | 159 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

காத்துவாக்குல ரெண்டு காதல் கதை

காத்துவாக்குல ரெண்டு காதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாக உருவாகியுள்ள, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தினை 2022 ஏப்ரல் 28ல் உலகம் முழுவதும் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படம் தெலுங்கில் ' கண்மணி ராம்போ கடிஜா ' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரைலர், டீசர், பாடல்களின் வீடியோக்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புகைப்படங்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் கதை ராம்போ (விஜய் சேதுபதி) ஒரு அதிர்ஷ்டம் இல்லாத கதாபாத்திரம். அவர் மழையில் நினைய நினைத்தால் அந்த மழை கூட நின்று விடும், அந்த அளவிற்கு அவரது அதிர்ஷ்டம் உள்ளது. அவர் பிறந்தவுடன் அவரது தந்தை இறந்துவிட, தாய் படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவை பார்க்க போனால், அவரது உடல் மேலும், மோசம் அடைவதாக நர்ஸ்களே சொல்லிவிடுவதால், அம்மாவை பார்ப்பதையே விட்டு விடுகிறார். விஜய் சேதுபதி பகலில் டாக்ஸி டிரைவராகவும், இரவில் பப் ஜிம் பாய்யாக பணி செய்கிறார்.   கண்மணி கங்குலி (நயன்தாரா) ஸ்பெஷல் சைல்ட் தம்பி மற்றும் ஒரு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது. டாக்ஸி டிரைவராக உள்ள விஜய் சேதுபதியுடன் நயன்தாராவுக்கு நட்பு ஏற்படுகிறது. கொடுத்த கடனை கேட்டு நயன்தாராவின் வீட்டிற்கு வந்து கடன்காரர்கள் தொல்லை செய்வதை தட்டிக்கேட்க, 'நானும் ரவுடி தான்' படத்தில் சொல்வதை போலவே, என்னை யாராச்சும் பெரிய ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா என விஜய் சேதுபதியிடம் நயன்தாரா கேட்கிறார். விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு உதவ, பின் இவர்களுக்குள் காதல் மலர்கிறது. இரவில் ஜிம் பாய்யாக ஒரு பப்பில் பணி செய்யும் விஜய் சேதுபதிக்கு, தினதோறும் பப்பிற்கு வரும் சமந்தா இருவருக்கும் இடையில் ஒரு காதல் ரயில் ஓட தொடங்குகிறது. சமந்தா மற்றும் நயன்தாராவிடம் ஒரு கட்டத்தில் வசமாக மாட்டி கொள்ளும் விஜய் சேதுபதி, பிரபு உதவியுடன் பழசையெல்லாம் மறந்து விட்டார் விஜய்சேதுபதி என ஒரு பொய்யை சொல்லி ஒரு பொய்யான டிவி ஷோவை  பிரபு டிவியில் விஜய்சேதுபதிக்காக நடத்துகிறார். கண்மணியா? கதீஜாவா? இருவரில் யாரை காதலிக்கிற என்ற பிரபுவின் கேள்விக்கு, அப்போது தான் ஐ லவ்யூ டூ என்றும் இவங்க ரெண்டு பேரும் வந்த உடனே தான் எனக்கு என் வாழ்வில் நல்லதெல்லாம் நடக்குது.. இருவருமே எனக்கு புடிச்சிருக்கு.. ரெண்டு பேரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என சொல்ல நயன்தாராவும் சமந்தாவும் என்ன முடிவை எடுக்கிறாங்க படத்தின் கிளைமேக்ஸ் எப்படி முடிகிறது என்பது தான் செம ட்விஸ்ட். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பிரத்யேக தகவல்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் உருவாகியுள்ள  இரண்டாவது படமாகும். இவர்களது கூட்டணியில் உருவான முதல் திரைப்படமான ' நானும் ரவுடிதான் ' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா - திரிஷா நடிக்கவிருப்பதாக 2016ஆம் ஆண்டு தகவல்கள் வெளியாகின. பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி சென்று, இயக்குனர் விக்னேஷ் சிவன் ' தானா சேர்ந்த கூட்டம் ' படத்தினை இயக்கினார். பின் சில காரணங்களால் இப்படத்திலிருந்து சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா வெளியேற, பின்னர் விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகவுள்ளது என இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியானது.
Read More

காத்துவாக்குல ரெண்டு காதல் நடிகர்கள் & படக்குழுவினர்

காத்துவாக்குல ரெண்டு காதல் அணியின் தகவல்

இயக்குனர் விக்னேஷ் சிவன்
ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர், விஜய் கார்த்திக் கண்ணன்
தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் லலித் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
காத்து வாக்குல ரெண்டு காதல் - ‛ஒரு முட்டையில் 2 ஆம்லெட்’
தினமலர் சினிமா விமர்சனம்
காத்து வாக்குல ரெண்டு காதல் - வாடை காத்து, கோடை காத்து
சினிஉலகம்
மொத்தத்தில் காத்துவாக்குல விஜய் சேதுபதி செய்த இரண்டு காதலும் சக்ஸஸ்.. பலமுறை பார்க்கலாம்
பில்மிபீட் - விமர்சனம்
ரஜினிகாந்தின் வீரா படத்தை எல்லாம் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் ரொம்பவே நல்லா இருக்கும்.

காத்துவாக்குல ரெண்டு காதல் ட்ரெய்லர்

Video Thumbnail

காத்துவாக்குல ரெண்டு காதல் செய்திகள்

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காத்துவாக்குல ரெண்டு காதல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+