Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ட்ரெய்லரே இப்படியா?...லூட்டி அடிக்கும் நயன்தாரா, சமந்தா
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கலக்கலான டிரைலர் வெளியாகி உள்ளது.
டீசரை போலவே டிரைலரும் வித்தியாசமாக இருப்பதை பார்த்தால், படம் முழுக்கவே ரசிகர்களுக்கு என்டர்டெயின்மெயின்ட் கன்ஃபார்ம் என்பது போலத்தான் தெரிகிறது.
வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.
என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் நடிகை சமந்தா.. என்ன ஆச்சு?

ஓடிடி இல்லை
கடந்த ஆண்டு இறுதியில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால், ஓடிடியில் இல்லை இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், இறுத்யாக வரும் ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாவது உறுதியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரவுடி கிட்ட கூட்டிட்டு போறியா
காதம்பரி கதாபாத்திரமும் கண்மணி கங்குலி கதாபாத்திரமும் எந்தவொரு மாற்றமும் இல்லை போலத் தெரிகிறது. நானும் ரவுடி தான் படத்தில் வருவதை போல இந்த படத்திலும் "என்னை யாராவது பெரிய ரவுடி கிட்ட கூட்டிட்டு போறியா" என நயன்தாரா கேட்கும் காட்சிகள் சற்று க்ளீஷேவாகத்தான் இருக்கிறது. சமீப காலமாக பழைய பட வசனங்கள் வந்தாலே ரசிகர்கள் இரிடேட் ஆகி விடுகின்றனர்.

சமந்தாவுக்கு அப்படியொரு வசனம்
சமந்தா (கத்திஜா) மற்றும் நயன்தாரா (கண்மணி) இருவருமே ராம்போவை காதலித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு காட்சியில் என்னை ராம்போ கல்யாணம் பண்ணிட்டான் என நயன்தாரா சமந்தாவிடம் சொல்லி அவரை சரி கட்ட நினைக்க, உன்னை கல்யாணம் பண்ணிட்டான்.. என்னை பண்ணிட்டான் என அப்படியொரு அபத்தமான வசனத்தை வைத்துள்ளனர்.
டீயையும் காபியையும் கலந்து
நயன்தாரா (டீ வியாபாரம்) டீ புடிக்குமேன்னு கொடுக்க, சமந்தா காபியை கொடுக்க, இருவரையும் கல்யாணம் பண்ணி வாழ ஆசைப்படும் விஜய்சேதுபதி, டீயையும் காபியையும் கலந்து குடிக்கும் காட்சி எல்லாம் காமெடியாக படத்தில் வொர்க்கவுட் ஆகுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

கிரிக்கெட் வீரர்
இந்த கொடுமைகளுக்கு நடுவே கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வேறு விஜய்சேதுபதியிடம் இந்தியில் பேசி அடிவாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஓடாக தேய்ந்திருக்கும் நயன்தாரா, கொஞ்சம் வெயிட் குறைத்து நடித்து இருக்கும் விஜய்சேதுபதி, தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சைக்கு பிறகு தமிழில் சமந்தா என காத்துவாக்குல ரெண்டு காதல் அடுத்த வாரம் ரிலீசாகிறது.