Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் நடிகை சமந்தா.. என்ன ஆச்சு?
சென்னை: நடிகை சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், திடீரென நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் "என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்கிற ரீதியில் ஒரு ட்வீட்டை போட்டு வார்னிங் செய்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் நடிகை சமந்தாவை பற்றிய ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருவதால், இந்த ட்வீட் போட்டிருக்கிறாரா? அல்லது வேறு யாருக்காவது மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இதனை பதிவிட்டுள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
எக்குத்தப்பாக கேள்வி கேட்ட கணவர்…ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த நடிகை !

இரண்டாவது திருமணம்
சமந்தாவை பிரிந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெலுங்கு ரசிகர்கள் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அது முற்றிலும் வதந்தி, அது போன்ற ஒரு எண்ணம் தனக்கு இல்லை என நாக சைதன்யா அதிரடியாக கூறியுள்ளார்.

கதீஜாவா கண்மணியா
வரும் ஏப்ரல் 28ம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஸ்ரீசாந்த், பிரபு, ரெட்டின் கிங்ஸ்லி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகிறது. இந்நிலையில், கதீஜாவுக்கு ஆர்மி அதிகமாக கண்மணிக்கு ஆர்மி அதிகமா என சமூக வலைதளங்களில் போட்டியெல்லாம் வைத்து கதீஜாவுக்குத் தான் ஆர்மி எனக் கூறி ஒரு பக்கம் சண்டையை கிளப்பி உள்ளனர்.

விஜய் தேவரகொண்டா படம்
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிக்கப் போகிறார் நடிகை சமந்தா. ஆனால், நேற்று நடந்த பூஜையில் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை. அது தொடர்பாகவும் ஏகப்பட்ட மீம்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், அதன் காரணமாக சமந்தா இப்படி கோபப்பட்டு இருக்கிறாரா என ஒன்றுமே புரியவில்லை என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அமைதியா இருக்கான்னு நினைக்காதீங்க
"Don't ever mistake
MY SILENCE
for ignorance,
MY CALMNESS
for acceptance,
My
KINDNESS
for weakness." என நடிகை சமந்தா சற்று காட்டமாகவே சிலருக்கு எச்சரிக்கை கொடுக்கும் தொனியில் இந்த ட்வீட்டை போட்டு இருக்கிறார்.

எக்ஸ்பைரி டேட்
மேலும், "Kindness can have an expiry date" (கனிவாக இருப்பதற்கும் ஒரு எல்லை உண்டு" என நடிகை சமந்தா கூலாக யாரையோ படு பயங்கரமாக எச்சரிப்பதை உணர முடிகிறது. யாருடன் என்ன பிரச்சனை என்றும், ஏன் இப்படி டென்ஷனாக மாறிட்டீங்க சமந்தா என்றும், எதற்கும் கவலைப்பட வேண்டாம், நாங்க உங்க பக்கம் இருக்கோம் என சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.