X
தமிழ் » திரைப்படங்கள் » காவல் துறை உங்கள் நண்பன்
காவல் துறை உங்கள் நண்பன்

காவல் துறை உங்கள் நண்பன்

Documentary | Drama | Thriller | 27 Nov 2020 | U/A | 126 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

காவல் துறை உங்கள் நண்பன் கதை

காவல் துறை உங்கள் நண்பன் இயக்குனர் ஆர் டி எம் இயக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாஸ்கரன், ராஜபாண்டியன், சுரேஷ் ரவி இணைந்து தயாரிக்கும் ஃகிரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா மற்றும் சூர்யா இசையமைத்துள்ளனர். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவில் பட தொகுப்பாளர் வடிவேல் மற்றும் விமல்ராஜ் எடிட்டிங் பணிகளில் இப்படம் உருவாகியுள்ளது. பல போராட்டங்களுக்கு பின்னர் இத்திரைப்படம் 2020 நவம்பர் 27ல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தின் கதை அதிகார வர்க்கத்தின் ஈகோவிற்கு முன், சாதாரண மனிதனின் குரல் எப்படி நசுக்கப்படுகிறது என்பதுதான், காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தின் கதைக்கரு. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஜோடி, இப்படத்தின் நாயகன் சுரேஷ் மற்றும் நாயகி ரவீனா ரவி. வெளிநாட்டு வேலைக்காக உள்ளூர் ப்ரோக்கர்கள் மூலம் பல முயற்சிகளை எடுத்து வருகிறார் நாயகன் சுரேஷ். வீட்டு செலவிற்காக ஒரு உணவு டெலிவரி செய்யும் பணியை செய்துவருகிறார். ஒரு நாள் நாயகி ரவீனா ரவியின் நகையை ஒருவர் பறித்து செல்கிறார். இதனை அறியும் நாயகன், நாயகியுடன் அந்த நபரை தேடி அலைகிறார். அச்சமயம் இரவு நேரங்களில் பணிசெய்யும் காவலர்கள் இவரை பிடிக்கின்றனர். காவலர்களின் கேள்விக்கு மரியாதையோடு சரியாக பதில் சொல்ல தயங்கும் நாயகனை காவலர்கள் சந்தேகப்படுகின்றனர். தனது நிலை மறந்து காவலர்களை அவதூறாக பேசுகிறார், நாயகன் சுரேஷ். பின்னர் காவலர்களுக்கும் நாயகனுக்கும் இடையே மோதல் தொடங்குகிறது. நாயகன் பெற்றோர்களின் உதவி இல்லாமல் வாழும் நிலையை அறியும் காவலர் மைம் கோபி, நாயகனை அடித்து துன்புறுத்துகிறார். காவலர்களிடம் சரியாக மாட்டிக்கொண்டு சித்திரவதை அனுபவிக்கும் இந்த ஜோடி, பின் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதை ஏழைகளின் வலியோடு சொல்கிறது, இப்படத்தின் கதை.
Read More

காவல் துறை உங்கள் நண்பன் நடிகர்கள் & படக்குழுவினர்

காவல் துறை உங்கள் நண்பன் அணியின் தகவல்

இயக்குனர் ஆர் டி எம்
ஒளிப்பதிவாளர் கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ
தொகுப்பாளர் NA
இசை ஆதித்யா , சூர்யா
தயாரிப்பாளர் சுரேஷ் ரவி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

காவல் துறை உங்கள் நண்பன் விமர்சகர்களின் விமர்சனம்

பிலிமிபீட்
அதிகார வர்க்கத்தின் ஈகோவிற்கு முன், சாதாரண மனிதனின் குரல் எப்படி நசுக்கப்படுகிறது என்பதுதான், காவல்துறை உங்கள் நண்பன்!

காவல் துறை உங்கள் நண்பன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

காவல் துறை உங்கள் நண்பன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+