twitter
    Tamil»Movies»Kodi
    கொடி

    கொடி

    Release Date : 28 Oct 2016
    2.5/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    கொடி இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, மற்றும் அனுபாமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
    • ஆர் எஸ் துரை குமார்
      ஆர் எஸ் துரை குமார்
      Director
    • வெற்றிமாறன்
      வெற்றிமாறன்
      Producer
    • சந்தோஷ் நாராயணன்
      சந்தோஷ் நாராயணன்
      Music Director
    • தனுஷ்
      தனுஷ்
      Singer
    • tamil.filmibeat.com
      2.5/5
      தனுஷுக்கே அளவெடுத்துத் தைத்த சட்டை மாதிரி ஒரு அரசியல் கதை.

      ஓவர் அரசியல் கிடையாது. மாவட்ட அளவில் வளரும் அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த நகர்வுகள், விரோதங்கள், துரோகங்கள்தான் கதையின் அடிநாதம்.

      இரட்டை வேடங்களில் முதல் முறையாக தனுஷ். ஏனோ வேலையில்லா பட்டதாரி தனுஷ் - அவர் தம்பி நினைவுக்கு வருகின்றனர். அரசியல்வாதி தனுஷ் மனசுக்குள் நிற்கிறார். அந்தப் பார்வை, தாடி, எதிராளிகளை அசராமல் எதிர்கொள்ளும் விதம்... என அனைத்திலும் தனுஷ் முத்திரை.

      இரண்டு நாயகிகள். அனுபமா பரமேஸ்வரனுக்கு வழக்கமான நாயகி வேடம்தான். த்ரிஷாவுக்குதான் 'ஹெவி வெயிட்' வேடம். அதை அவரால் தாங்க முடியவில்லை என்பது பல காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.

      எஸ்ஏ சந்திரசேகர், விஜயகுமார், கருணாஸ், காளி வெங்கட் என நிறைய பாத்திரங்கள். ஆனால் தனியாக காமெடி எதுவும் இல்லாதது கொஞ்சம் வெறுமைதான்.
    • days ago
      Arunraj
      Report
      Padam pakka masssssssss
    • days ago
      gohul raj
      Report
      KODI film is the best film of dhanush Blockbuster