»   »  தீபாவளி ரேஸ்: வசூலில் ஜெயித்தது கொடியா, காஷ்மோராவா?

தீபாவளி ரேஸ்: வசூலில் ஜெயித்தது கொடியா, காஷ்மோராவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் கொடி படம் ரிலீஸான இரண்டே நாட்களில் அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது.

தனுஷ் நடித்த கொடி, கார்த்தியின் காஷ்மோரா ஆகிய படங்கள் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகின. தீபாவளி அன்று அல்லாமல் ஒரு நாள் முன்பே இரண்டு படங்களும் வெளியாகின.


இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.


கொடி

கொடி

அடுத்தடுத்து பிளாப் படங்களால் கவலையில் இருந்த தனுஷுக்கு கொடி படம் உற்சாகத்தை அளித்துள்ளது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது.


காஷ்மோரா

காஷ்மோரா

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள காஷ்மோரா வெளியான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சனிக்கிழமை மட்டும் தமிழகத்தில் ரூ.8 கோடி வசூலித்துள்ளது.


கார்த்தி

கார்த்தி

காஷ்மோரா படம் தமிழகத்தில் ரூ.12.5 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.8 கோடி, கேரளா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளது.


தனுஷ்

தனுஷ்

தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸை பொறுத்தவரை காஷ்மோராவை பின்னுக்குத்தள்ளி கொடி ஆட்சி செய்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கொடியின் தெலுங்கு பதிப்பான தர்ம யோகியும் நன்றாக ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


English summary
Dhanush and Karthi are all smiles as their movies Kodi and Kashmora are rocking in the box offices.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil