X
தமிழ் » திரைப்படங்கள் » கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன்

கோடியில் ஒருவன்

Action | Drama | Thriller | 17 Sep 2021 | U/A | 152 Mins
Tamil

3.4 /5 Users

3 /5 Filmibeat

கோடியில் ஒருவன் கதை

கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஒரு கமர்சியல் - அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், பல போராட்டங்களுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் உதயா குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் படத்தின் படக்குழுவினர் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டிரைலர், ப்ரோமோ மற்றும் வீடியோ பாடல்கள் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் புகைப்படங்கள் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் கதை தேனி மாவட்டத்தில் உள்ள மலை பிரதேச இடத்தில் அமைந்திருக்கும் கோம்பை என்னும் ஊரில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒரு இளம் பெண்ணை போட்டியிட அந்த ஊர் தலைவர் அறிவுறுத்துகிறார். ஏனெனில் அந்த ஊர் ஒரு பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். தன் கைவசத்தில் இருக்கும் பெண்ணை தேர்தலில் நியமித்து அந்த ஊரினை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார், ஊர்த்தலைவர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அந்த இளம் பெண் ஊருக்காக பல நல்ல விஷயங்களை செய்கிறார். சில நேரங்களில் ஊர் தலைவரை எதிர்த்து நல்லது செய்யும் இந்த பெண்ணை, ஊர் தலைவர் கொலை செய்ய முடிவெடுக்கிறார். கர்ப்பமாக இருக்கும் அந்த பெண், அங்கிருந்து தப்பிக்கிறார். அவருக்கு பிறக்கும் குழந்தைதான் விஜயராகவன் (விஜய் ஆன்டனி). அங்கிருந்து படம் துவங்குகிறது. விஜய் ஆன்டனி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது அவரின் தாயின் கனவு. தனது தாயின் கனவை நிறைவேற்ற சென்னை வருகிறார், விஜய் ஆன்டனி. சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறும் விஜய் ஆன்டனி, அங்கிருக்கும் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து தனது ஐ.ஏ.எஸ் பரிச்சைக்கு தயாராகுகிறார். தன்னை சுற்றி உள்ளவருக்கு நல்லது செய்யும் குணம் கொண்ட விஜய் ஆன்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் தீய வழியில் பயணிக்கும் பல சிறுவர்களை நல்வழிப்படுத்துகிறார். இதற்காக அங்கிருக்கும் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் இவரை கொண்டாடுகிறார்கள். அந்த ஹவுசிங் போர்டு பகுதி மக்களுக்காக இவர் செய்யும் உதவி, அங்கிருக்கும் கவுன்சிலர், அவரது அடியாட்கள் மற்றும் அவர்களின் முதலாளியான பெத்த பெருமாள் (ராமசந்திர ராஜு)-வின் பகையை சம்பாரிக்கிறார். பின் வில்லன்களால் நாயகனுக்கு பல கொடச்சல் மற்றும் இன்னல்கள் வருகிறது. பின் என்ன நடந்தது? தாயின் கனவை நிறைவேற்றினாரா விஜய் ஆன்டனி ? என்பதே கதை.
Read More

கோடியில் ஒருவன் நடிகர்கள் & படக்குழுவினர்

கோடியில் ஒருவன் அணியின் தகவல்

இயக்குனர் அனந்த கிருஷ்ணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் விஜய் ஆண்டனி
இசை நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கோடியில் ஒருவன் விமர்சகர்களின் விமர்சனம்

மாலை மலர்
மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ வேகம் குறைவு.
தமிழ் சமயம்
விஜய் ஆண்டனியின் நடிப்பு முதல் பாதியை போன்று இரண்டாவது பாதியில் பொருத்தமாக இல்லை. பயங்கரமாக பில்ட்அப் கொடுத்துவிட்டு இறுதியில் அவசரமாக முடிக்கப்பட்டது போன்று இருக்கிறது. அம்மா சென்டிமென்ட் மட்டுமே படத்தை காப்பாற்றியிருக்கிறது.
பில்மிபீட்
சில விஷயங்களில் நம்பகத்தன்மை ஏற்படும் விதம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு காட்சிகளை அமைத்திருந்தால் மிகவும் பிரம்மாண்டமான ஒரு நல்ல கதையாக கோடியில் ஒருவன் அமைந்திருக்கும்.

கோடியில் ஒருவன் ட்ரெய்லர்

Video Thumbnail

கோடியில் ஒருவன் பாடல்கள்

கோடியில் ஒருவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
3.4 /5 Your Rating

கோடியில் ஒருவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+