For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  "கோடியில் ஒருவன்" இயக்கிய ஆனந்த கிருஷ்ணனுக்குக் ரசிகர்கள் கொடுத்த பாராட்டுகள்

  |

  சென்னை : இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் 'ஆள்', 'மெட்ரோ ' படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்கியுள்ள படம் 'கோடியில் ஒருவன்' . இப் படத்திற்குத் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல கற்றவர்கள் மூத்தவர்கள் குடும்பத்துப் பெரியவர்கள் மத்தியிலும் கூட நல்ல வரவேற்பு வந்து உள்ளது என்று பலரும் சொல்லி வருகின்றனர் .

  Recommended Video

  இந்த படத்துக்கு நான்தான் எடிட்டர் | Vijay Antony & Aathmika Exclusive|Kodiyil oruvan|Filmibeat Tamil

  ஏராளமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இயக்குநரைப் பாராட்டுகிறார்கள் என்று மகிழ்ச்சியில் அவர் தெரிவித்து உள்ளார் . அவர்களின் கருத்துக்கள் வழக்கமான சினிமா பார்த்த ரசிகர்களின் கருத்துகளாக இல்லாமல் வேறு விதமாகவும் ஆழமாக இருக்கிறது என்று இயக்குனர் பல நெருங்கிய பத்திரிக்கை நண்பர்களிடம் சொல்லி உள்ளார் .

  யப்பப்பா...மேடையில் முத்தமிட்டு, கன்னத்தை கடித்து... வைரலாகும் பூர்ணா வீடியோ யப்பப்பா...மேடையில் முத்தமிட்டு, கன்னத்தை கடித்து... வைரலாகும் பூர்ணா வீடியோ

  "ஒரு மனிதனுக்கு விடுதலை என்பது கல்வியால்தான் வரும். ஒரு மனிதனுக்கு விடுதலை தருகிற அந்தக் கல்வியை முதலில் அவனைப் பெற்றெடுத்த தாய் மூலம் கற்கிறான். அந்தக் தாய்தான் ஒரு மனிதனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கற்றுக் கொடுக்கிறாள்.அவளிடம் கற்றதை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவன் மேலும் கற்கிறான் .பலருக்கும் கற்றுக் கொடுக்கிறான். 'நான்மணிக்கடிகை' பாடல் மூலம் ஒரு ரசிகர் சொன்ன விஷயத்தை ஆனந்த கிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து உள்ளார் .

  சிறியதாக இருந்தாலும்

  சிறியதாக இருந்தாலும்

  கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவார்கள் அது போலே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரவேற்புக்கு உரியது .பழந்தமிழ் இலக்கியமான 'நான்மணிக்கடிகை' யில் வரும் ஒரு பாடல் பற்றி ஒரு ரசிகர் குறிப்பிட்டு உள்ளார் .

  'திரி அழல் காணின், தொழுப விறகின்
  எரி அழல் காணின், இகழ்ப ஒரு குடியில்
  கல்லாது மூத்தானைக் கைவிட்டு, கற்றான்
  இளமை பாராட்டும், உலகு. இந்த பாடலின் பொருளானது - விளக்கின் திரியில் இருந்து வெளிப்படும் அழல் அதாவது தீ சிறியதாக இருந்தாலும் அதை வணங்குவர். விறகில் எரியும் சுடர் பெரியதாக இருந்தாலும் மக்கள் அதை வெறுப்பர். அவ்வாறே ஒரு குடும்பத்தில் படிக்காத மூத்தவனை விட கற்ற இளையவனையே அனைவரும் மதித்துப் போற்றுவர்.மூத்தோன் இருந்தாலும் இளையவன் கல்வி கற்றவனாக இருந்தால் அவனைத்தான் இந்த உலகம் மதிக்கும் என்பது இதன் பொருள்.

  சுதந்திரமாகவும் சுத்தமாகவும்

  சுதந்திரமாகவும் சுத்தமாகவும்

  இப்படிக் கல்வியின் மேன்மை பற்றி ஆனந்தகிருஷ்ணன் இந்தப் படத்தில் அழகாக கூறியிருக்கிறார் என்றும் படத்தில் பல செய்யுள்கள் நினைவூட்டப் படுகின்றன என்பதை சொல்லி, பொதுச் சேவை பற்றியும் இப்படத்தில் காட்டியுள்ளார். பொதுவாகப் பொதுச் சேவைக்கு வருபவர்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் பேராசை இல்லாமல் இருக்க வேண்டும்.மக்களுக்காக பொதுச் சேவை செய்பவர்கள் சம்பளம் வாங்கக் கூடாது .அவர்களுக்கு என்று எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது .அந்த பொதுப்பணி அப்போதுதான் சுதந்திரமாகவும் சுத்தமாகவும் இருக்கும் போன்ற விஷயங்களை மையமாக கொண்டு தாய் பாசம் கலந்து கோடியில் ஒருவன் படம் மிகவும் ரசிக்க வைக்கிறது என்று ரசிகர்கள் பாராட்டி உள்ளனர் .

  அரசாங்கப் பணத்தை

  அரசாங்கப் பணத்தை

  ஒரு சாதாரண கவுன்சிலர் கூட தன்னால் எவ்வளவு பணம் அடிக்க முடியும் என்று பார்க்கிறான். அவனது கையாள்கள் கூட அரசாங்கப் பணத்தை சுரண்டுகிறார்கள். இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை இந்த படத்தில் அழகாகக் கூறி ஏராளமான விஷயங்களை மறைமுகமாகக் சொன்ன விதத்தில் பல ரத பட்ட ரசிகர்கள் மிகவும் ஹாப்பி .

  நல்ல கருத்தைச் சொல்லும்

  நல்ல கருத்தைச் சொல்லும்

  ' கோடியில் ஒருவன்' ஒரு சாதாரண பொழுதுபோக்கு படம் தான் என்று சிலர் சொன்னாலும் அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கியமான ஒரு படம் 'மக்களுக்கு நல்ல கருத்தைச் சொல்லும் படம் என்றும் தற்போதைக்கு நல்ல அரசியல் பாடம் என்றும் சமூக வலை தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர் .

  English summary
  Kodiyil Oruvan director Anand Krishnan gets appreciation from audience for his extradinory script and screenplay. Vijay Antony and Aathmika done their roles in a very perfect way makes the movie a sure shot hit.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X