X
மாறன்

மாறன்

Action | Drama | Thriller | 11 Mar 2022 | 130 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

மாறன் கதை

மாறன் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் மாளவிகா மோஹனன், ஸ்ம்ருதி வெங்கட், ராம்கி, ஆடுகளம் நரேன், இளவரசு, சமுத்திரக்கனி என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை சத்யா ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி ஜி தியாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதிரடி, திரில்லர் மற்றும் செண்டிமெண்ட் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி கே எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2022 மார்ச் 11ல் இணையதள ஆன்லைன் ஓடிடி தளமான ' டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ' செயலியில் நேரடியாக வெளியாகியுள்ளது. மாறன் திரைப்படத்தில் பணியாற்றிய படக்குழு மற்றும் திரைநட்சத்திரங்கள் மாறன் திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் மாறன் திரைப்படத்தின் புகைப்படங்கள் மாறன் திரைப்படத்தின் கதை நேர்மையான பத்திரிக்கையாளரான ராம்கி, பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். அதே சமயத்தில் பிரசவத்தின் போது அவரது மனைவியும் உயிரிழக்கிறார். வழக்கமான தமிழ் சினிமாவில் வருவதை போல சிறுவயதிலையே தாய், தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கையை பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து வளர்க்கிறார். தனுஷின் இன்ட்ரோ சீனே பாரில் ரவுடிகளுடன் சண்டை, போதையில் போலீசிடம் சிக்கி, ஹீரோயின் மாளவிகா வந்து மீட்டு செல்வது தான். பழைய சினிமாக்களில் வருவதை போல் தீ பார்த்து டென்ஷனாகி, மயங்கி விழுகிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது. அப்பாவை போலவே நேர்மையான பத்திரிக்கையாளராக உண்மையை எழுதியதால் பல வேலைகளில் இருந்து துறத்தப்படுகிறார், தனுஷ். புதிய நிறுவனத்தில் வேலை, வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பிரபல பத்திரிக்கையாளராகிறார், தனுஷ். காவல் துறையை சேர்ந்த தனது நண்பன் கேட்டதால் அரசியல்வாதியான சமுத்திரக்கனி செய்யும் ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேட்டை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து உண்மையை எழுதுகிறார். இதனால் அரசியல் பகையை சம்பாதிக்கிறார் தனுஷ். இதனால் ஆத்திரமடைந்த எதிரிகள், தனுஷின் தங்கையை கடத்தி, தீ வைத்து எரிக்கிறார்கள். தனுஷிற்கு ஏன் தீ என்றால் அலர்ஜி என்பதற்காக இந்த பிளாஷ்பேக். தங்கை இறந்த சோகத்தில் குடித்து குடித்து விழுந்து கிடக்கும் ஹீரோவை, ஹீரோயின் தைரியம் சொல்லி கொலையாளிகளை கண்டுபிடிக்க சொல்கிறார். தங்கையை கொலை செய்தவர்களை மாறன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.
Read More

மாறன் நடிகர்கள் & படக்குழுவினர்

மாறன் அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் நரேன்
ஒளிப்பதிவாளர் விவேகானந்த சந்தோஷம்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மாறன் விமர்சகர்களின் விமர்சனம்

ABP திரைவிமர்சனம்
பிடித்த சீன்களை ரசித்தும், பிடிக்காத சீன்களை ஓட்டி விட்டும் மாறனை பார்க்கலாம்.
விகடன் விமர்சனம்
ஒரேயொரு கேள்விதான் தனுஷ்... ஏன் இப்படி?
மாலை மலர்
மொத்தத்தில் 'மாறன்' பெரிய மாற்றம் இல்லை.
தினமலர் - சினிமா
மாறன், மதிமாறன்... நல்லவேளை அவர்களே தெரிந்து 'மதி'யை எடுத்துவிட்டார்கள்.
சினிஉலகம்
மொத்தத்தில் 'மாறன்' படத்தை பார்த்து முடிக்கும்போது 'இது உண்மையிலேயே துருவங்கள் 16 எடுத்த கார்த்திக் நரேன் படம் தானா?' என கேட்க தோன்றும்.

மாறன் ட்ரெய்லர்

Video Thumbnail

மாறன் பாடல்கள்

மாறன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மாறன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+