X
மாயவன்

மாயவன்

Comedy | 15 Dec 2017 |
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

மாயவன் கதை

மாயவன் இயக்குனர் சி வி குமார் இயக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுந்தீப் கிஷன், லாவண்யா திரிபதி, டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். சாகா வரம் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானியின் விபரீத முயற்சியைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியின் கதையே இந்த மாயவன். 2017 இல் ஒரு காட்சி, ஒரு விஞ்ஞானி உடலுக்கு மரியாதை செலுத்தும் ஜிம் ட்ரெய்னர், அந்த ஜிம் ட்ரெய்னர் ஒரு கொலை செய்துவிட அவனை துரத்தும்போது காயப்படும் போலீஸ் ஆபிசர் என்று படம் துவங்கும்போதே மர்ம முடிச்சுகளுடன் துவங்குகிறது. இந்த சம்பவங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்புதான் படம்.
Read More

மாயவன் நடிகர்கள் & படக்குழுவினர்

மாயவன் அணியின் தகவல்

இயக்குனர் சி வி குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜிப்ரான்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மாயவன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முதலில் ஒரு துப்பறியும் கதைக்கு தேவையான திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கும் நலன் குமாரசாமிக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும் அவைகளுக்கிடையேயான முடிச்சும் அவற்றை அவிழ்க்கும் ட்விஸ்ட்களும் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன். தன்னுடைய ரோலுக்கான நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார். ஆனால் போலீஸ் அதிகாரிக்கான கம்பீர குரல் மட்டும் மிஸ்ஸிங். சைக்யாட்ரிஸ்டாக லாவண்யா திரிபாதி. அழகு வரவு. நடிக்கவும் தெரிகிறது. வில்லன்களாக டேனியல் பாலாஜியும் ஜாக்கி ஷெராஃபும். முதல் பாதியை டேனியல் பாலாஜியும் இரண்டாம் பாதியை ஜாக்கி ஷெராஃபும் நிரப்புகிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் பிரமாதப்படுத்துகிறார் ஜாக்கி ஷெராஃப். என்ன கம்பீரம்! பகவதி பெருமாள், ஜெயபிரகாஷ், கே எஸ் ரவிக்குமார், அக்‌ஷரா கவுடா, மைம் கோபி என மற்றவர்கள் கதையை நகர்த்த பயன்பட்டிருக்கிறார்கள். ஜிப்ரானின் பின்னணி த்ரில் கூட்டுகிறது. கோபி அமர்நாத்தின் கேமராவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் கச்சிதம். லேப் செட்களில் தெரியும் பிரம்மாண்டம் யார் அந்த ஆர்ட் டைரக்டர் என்று கேட்க வைக்கிறது. லாஜிக் தவறுகளும் வேகத்தடையாக இருக்கும் பாடல்களும்தான் குறைகள். குறிப்பாக இரண்டாம் பாதியில். ஒரு சுவாரஸ்யமான த்ரில்லரை விரும்பும் ரசிகர்கள் தாராளமாக மாயவன் பார்க்கலாம். தமிழுக்கு நன்கு அறிமுகமான நடிகர்களை மெயின் கேரக்டர்களில் நடிக்க வைத்திருந்தால் மெகா ஹிட் அடித்திருப்பான் மாயவன். ஆனாலும் ஏமாற்றமாட்டான் மாயவன்.

மாயவன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மாயவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+