twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாயவன் விமர்சனம்

    By Shankar
    |

    Recommended Video

    மாயவன் பட விமர்சனம்- வீடியோ

    Rating:
    2.5/5
    Star Cast: சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராப், லாவண்யா, டேனியல் பாலாஜி
    Director: சிவி குமார்

    நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஜாக்கி ஷெராப், லாவண்யா, டேனியல் பாலாஜி

    ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

    இசை: ஜிப்ரான்

    தயாரிப்பு - இயக்கம்: சிவி குமார்

    தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குநர்களை பெரிய பட இயக்குநர்கள் ஆக மாற்றியதில் முக்கிய பங்கு சிவி குமாருக்கு உண்டு. திட்டமிட்டு பட்ஜெட்டில் படம் எடுத்து லாபம் பார்ப்பதில் வல்லவரான சிவி குமாரின் முதல் இயக்குநர் முயற்சியை வெற்றி பெற வைத்தானா மாயவன்? பார்ப்போம்!

    சாகா வரம் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானியின் விபரீத முயற்சியைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியின் கதையே இந்த மாயவன்.

    2017 இல் ஒரு காட்சி, ஒரு விஞ்ஞானி உடலுக்கு மரியாதை செலுத்தும் ஜிம் ட்ரெய்னர், அந்த ஜிம் ட்ரெய்னர் ஒரு கொலை செய்துவிட அவனை துரத்தும்போது காயப்படும் போலீஸ் ஆபிசர் என்று படம் துவங்கும்போதே மர்ம முடிச்சுகளுடன் துவங்குகிறது. இந்த சம்பவங்களுக்கு இடையே இருக்கும் பிணைப்புதான் படம்.

    Maayavan Review

    முதலில் ஒரு துப்பறியும் கதைக்கு தேவையான திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கும் நலன் குமாரசாமிக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும் அவைகளுக்கிடையேயான முடிச்சும் அவற்றை அவிழ்க்கும் ட்விஸ்ட்களும் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

    இன்ஸ்பெக்டர் குமரனாக சந்தீப் கிஷன். தன்னுடைய ரோலுக்கான நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார். ஆனால் போலீஸ் அதிகாரிக்கான கம்பீர குரல் மட்டும் மிஸ்ஸிங்.

    சைக்யாட்ரிஸ்டாக லாவண்யா திரிபாதி. அழகு வரவு. நடிக்கவும் தெரிகிறது.

    வில்லன்களாக டேனியல் பாலாஜியும் ஜாக்கி ஷெராஃபும். முதல் பாதியை டேனியல் பாலாஜியும் இரண்டாம் பாதியை ஜாக்கி ஷெராஃபும் நிரப்புகிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் பிரமாதப்படுத்துகிறார் ஜாக்கி ஷெராஃப். என்ன கம்பீரம்!

    பகவதி பெருமாள், ஜெயபிரகாஷ், கே எஸ் ரவிக்குமார், அக்‌ஷரா கவுடா, மைம் கோபி என மற்றவர்கள் கதையை நகர்த்த பயன்பட்டிருக்கிறார்கள்.

    ஜிப்ரானின் பின்னணி த்ரில் கூட்டுகிறது. கோபி அமர்நாத்தின் கேமராவும் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் கச்சிதம். லேப் செட்களில் தெரியும் பிரம்மாண்டம் யார் அந்த ஆர்ட் டைரக்டர் என்று கேட்க வைக்கிறது.

    லாஜிக் தவறுகளும் வேகத்தடையாக இருக்கும் பாடல்களும்தான் குறைகள். குறிப்பாக இரண்டாம் பாதியில்.

    ஒரு சுவாரஸ்யமான த்ரில்லரை விரும்பும் ரசிகர்கள் தாராளமாக மாயவன் பார்க்கலாம். தமிழுக்கு நன்கு அறிமுகமான நடிகர்களை மெயின் கேரக்டர்களில் நடிக்க வைத்திருந்தால் மெகா ஹிட் அடித்திருப்பான் மாயவன். ஆனாலும் ஏமாற்றமாட்டான் மாயவன்.

    English summary
    Review of CV Kumar's maiden directorial Maayavan movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X