X
நோட்டா

நோட்டா

Patriotic | 05 Oct 2018 | 153 Mins
Tamil

3 /5 Users

3 /5 Filmibeat

நோட்டா கதை

நோட்டா இரு முகன் புகழ் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இருமொழி திரைப்படமாக உருவான படம். இத்திரைப்படத்தில் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா மற்றும் மெஹ்ரீன் பிர்சடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கேஇ  ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.  கதை :  தமிழக முதலமைச்சர் விநோதனின் (நாசர்) மகன் பிளேபாய் வருண் (விஜய் தேவரகொண்டா). ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் விநோதன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு சாமியாரின் சொல்படி தனது வாரிசான வருணை அந்தப் பதவியில் உட்கார வைக்கிறார். வேண்டா வெறுப்பாக முதலமைச்சர் பதவியில் அமரும் வருண் அரசியல் விளையாட்டை எப்படி விளையாடுகிறார் என்பதே படம். தமிழக முதலமைச்சர் விநோதனின் (நாசர்) மகன் பிளேபாய் வருண் (விஜய் தேவரகொண்டா). ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் விநோதன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு சாமியாரின் சொல்படி தனது வாரிசான வருணை அந்தப் பதவியில் உட்கார வைக்கிறார். வேண்டா வெறுப்பாக முதலமைச்சர் பதவியில் அமரும் வருண் அரசியல் விளையாட்டை எப்படி விளையாடுகிறார் என்பதே படம்.
Read More

நோட்டா நடிகர்கள் & படக்குழுவினர்

நோட்டா அணியின் தகவல்

இயக்குனர் ஆனந்த் சங்கர்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நோட்டா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சர்ச்சையாக தமிழக முதல்வராகும் நாயகன் அதில் வரும் சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே நோட்டா படம். பிளேபாய், டம்மி முதலமைச்சர், பொறுப்பான முதலமைச்சர் என வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. தமிழ்நாட்டின் சமகால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிக்க தனி தைரியம் வேண்டும். சிறப்பாக செய்திருக்கிறார். அழகாக தமிழ் பேசி நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோ விஜய். வில்லன்...? விஜய் யாரை எதிர்த்து போராடுகிறார் என்பதே புரியவில்லை. எதிர்கட்சித் தலைவரின் மகள் கயல் வரதராஜனை எதிர்த்தா, சொந்த தந்தையை எதிர்த்தா அல்லது ஆட்சியாளர்களை அடக்கியாளும் சாமியாரை எதிர்த்தா... இந்த கேள்விக்கான விடையை தேடும் முன் படம் முடிந்துவிடுகிறது. ரவுடி சி.எம்.மாக மாறி அதிரடியாக அரசியல் களம் இறங்கும் விஜய், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம். 'கொஞ்சம் நிமிர்ந்து பழகுங்கடா... அப்புறம் முகத்த சரியா பார்க்கலைன்னு சிலையை தப்பா செஞ்சிடப்போறிங்க' என்பது உள்ளிட்ட சில வசனங்கள் மட்டுமே கவனம் ஈக்கின்றன. ஒரு அரசியல் படத்துக்கான வசனங்கள் இதில் மிஸ்ஸிங். படத்தில் கருணாகரன் எதற்காக இருக்கிறார் என்பதே தெரியவில்லை. காமெடியும் செய்யவில்லை. தனது குருநாதர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். இது அரசியல் திரில்லர் படமா இல்லை அரசியல் நையாண்டி படமா என்பதே புரியவில்லை. மொத்தில் நோட்டாவுக்கு ஓட்டுப் போடலாமா வேண்டாமா என்பதை வாக்காளராகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நோட்டா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
3 /5 Your Rating

நோட்டா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+