Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கருப்பு.. வெள்ளை.. கவிதை நீ.. நோட்டா அழகியின் லேட்டஸ்ட் போஸ்ட் !
Recommended Video
சென்னை : சஞ்சனா நட்ராஜன் புதிய போட்டோஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சஞ்சனாவை நாம் நோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பார்த்திருப்போம். இவர் விளம்பரங்கள் குறும்படங்கள், இணைய தொடர்கள் என பலவற்றில் நடித்து பிரபலமடைந்தவர். இவரது முதல் பணி மாடலிங்காகும். இவர் கடைசியாக முக்கிய வேடத்தில் டாப்ஸியின் கேம் ஓவர் படத்தில் நடித்து அசத்தியிருந்தார் .

மாடல்களின் முக்கிய களம் சமூக வலைத்தளம் தான் அதிலும் முக்கியமாக அதிகபடியான மாடல்கள் பயன்படுத்தும் தளம் இன்ஸ்டாகிராம் தான் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ஆடையில் அழகிய போட்டோகளை பதிவேற்றியுள்ளார் .
அதில் சில போட்டோக்களை கலர் புகைப்படங்களாகவும் சில புகைப்படங்கள் கருப்பு வெள்ளை புகைப்படங்களாகவும் எடுத்து பதிவேற்றியுள்ளார். அதிகபடியான கலர்கள் நிறைந்த புகைப்படங்களையே நாயகிகளும் மாடல்களும் விரும்புவது வழக்கம். ஆனால் வேறுபட்ட முறையில் கருப்பு வெள்ளை புகைப்படமாக எடுத்து அசத்தியிருக்கிறார் சஞ்சனா.

கலர் புகைப்படங்களை விட கருப்பு வெள்ளை புகைப்படங்களை தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பகிர்ந்துள்ளனர். கமெண்ட்களில் வழக்கம் போல தங்களின் அன்பையும் செலுத்தி வருகின்றனர் .
சஞ்சனா பிரபலமடைந்தது நோட்டா மட்டுமல்ல பாலாஜி மோகன் இயக்கிய அஸ் ஐயம் சவரிஃங் பிரெம் காதல் எனும் இனணய தொடரின் மூலமும் தான் .இதில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டபடவே இவருக்கு ஷங்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டமான படைப்பான 2.0வில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சஞ்சனா.
மேலும் சஞ்சனா ஷங்கர் அடுத்ததாக எடுக்கவிருக்கும் பாய்ஸ் 2 படத்திலும் தேர்வாகிவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பார்வை இதற்கு முன்பே வெளியிடபட்ட நிலையில் படப்பிடிப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இந்தியன் 2 படத்திற்கு பிறகு இந்த படத்தை பற்றிய தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.