X
எஸ் 3

எஸ் 3

Action | 09 Feb 2017 | U | 110 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

எஸ் 3 கதை

எஸ் 3 தமிழ் அதிரடித் திரைப்படம். இயக்குனர் ஹரி மற்றும் சூர்யாவின் கூட்டனி சிங்கம் திரைப்படம் வாயிலாக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இத்திரைப்படத்தில் சூர்யா உளவுத்துறை அதிகாரியாக வேடம் ஏற்றுள்ளார். கதை : ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கமிஷனர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்கு ஆந்திர அரசு, தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது. எனவே, இந்த கொலையை பற்றி விசாரணை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் சூர்யா நியமிக்கப்படுகிறார். இதற்காக விசாகப்பட்டினம் வரும் சூர்யாவை விமான நிலையத்தில் இருந்தே அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பின்தொடர்கிறார் ஸ்ருதிஹாசன். அதேசமயம் சூர்யா, கமிஷனரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குகிறார். ஒருகட்டத்தில் போலீஸ் கமிஷனர் கொலையில் பெரிய முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பது சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதாவது, வெளிநாட்டிலிருக்கும் வெளிநாட்டு கழிவுகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து, ஒரு மர்ம கும்பல் அதை எரிக்கும்போது, காற்று மாசுபட்டு நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், அந்த கும்பல் வெளிநாட்டில் காலாவதியான மருந்துகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை விற்பனை செய்வதையும் அறிகிறார். இந்த கும்பலை பிடிக்க முயற்சி எடுத்த கமிஷனர் அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டதும் சூர்யாவுக்கு தெரிய வருகிறது. மேலும், இந்த கும்பலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் புள்ளிகளும், பெரிய பண முதலைகளும் இருப்பது தெரிய வருகிறது. இதையெல்லாம் தனது போலீஸ் மூளையால் சூர்யா கண்டுபிடித்து, சட்டத்தின் முன் அவர்களை எப்படி தண்டித்ததார்? சூர்யாவை தொடர்ந்து பின்தொடரும் ஸ்ருதிஹாசனின் பின்னணி என்ன? என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள். 
Read More

எஸ் 3 நடிகர்கள் & படக்குழுவினர்

எஸ் 3 அணியின் தகவல்

இயக்குனர் ஹரி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எஸ் 3 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று பெயருக்கு போட்டுக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து வைப்பார்கள். ஆனால் ஹரி அதில் ரொம்ப தெளிவானவர். உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக சிங்கம் 3-ஐ எடுத்திருக்கிறார். ஒரு ஆக்ஷன் கதையில் எத்தனை ஓட்டைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... கதை அரைத்த மாவாகவே கூட இருக்கட்டும். ஆனால் காட்சிகளை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கடத்தும் வித்தை கை வந்தால் ஒவ்வொருவரும் ஹரிதான்! சி3 எனும் சிங்கம் 3 படத்தைப் பார்க்கும் யாரையும் யோசிக்கவே விடவில்லை ஹரி. பரபரவென நகர்கின்ற காட்சிகள். அதே நேரம் காதைக் கிழிக்கிறது சத்தம். எல்லோரும் ஹை டெசிபலில் கத்திக் கொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். முதல் இரு பாகங்களில் வந்த அதே துரை சிங்கம் சூர்யா. ஆனால் முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதல் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். பார்க்கிறவர்களின் ரத்தத்தைச் சூடாக்கும் பரபர நடிப்பு. வசன உச்சரிப்பில் அனல் கக்குகிறார். ஆனா இவ்ளோ கத்தாதீங்க சூர்யா... தொண்டைக்கும் இதயத்துக்கும் நல்லதல்ல, உங்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும்தான்.. அப்புறம் காதல் காட்சிகளில் எதற்கு இத்தனை விறைப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸா லவ் பண்ணுங்க பாஸ்! சூர்யாவுக்கு இளம் ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார் அனுஷ்கா. இருந்தாலும் ரசிக்க வைக்கிறது அவரது அழகு. நல்ல வேளை இந்தப் படத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். துப்பறியும் பத்திரிகையாளராக வரும் ஸ்ருதி, வழக்கம் போல சூர்யாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முந்தைய படத்தில் ஹன்சிகா செய்ததைத்தான் இதில் ஸ்ருதி செய்கிறார். பெரிதாகக் கவரவில்லை. சூரியுடன் அவரது காமெடிக் காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. ரோபோ சங்கர் - சூரி காமெடிக் காட்சிகள் வருவதும் தெரியவில்லை, கடந்து போவதும் தெரியவில்லை. அத்தனை வேகம். அனுபவித்து சிரிக்க கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம் இயக்குநர்! படத்தில் இரண்டு வில்லன்கள். ஏகப்பட்ட பாத்திரங்கள். வில்லனைத் தவிர, மற்றவர்கள் வந்தார்கள், சென்றார்கள். பாடகர் க்ரீஷுக்கும் ஒரு வேடம் தந்திருக்கிறார். ஹரிக்கு ஏற்ற கேமிராமேன் ப்ரியன். ஹாரிஸ் ஜெயராஜினி இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை மண்டைக்குள் செம குடைச்சல்! எடிட்டிங்கில் இன்னும்கூட கவனம் செலுத்தியிருக்கலாம் விடி விஜயன். அவரும்தான் என்ன செய்வார், 18 லட்சம் அடி எடுத்து, அதை 14 ஆயிரம் அடியாக்குவது சாமான்ய விஷயமா என்ன! வேகம் ஓகே.. இன்னும் கூட விவேகத்தோடு தந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு முறை பார்க்கலாம் எனும் ரகம் இந்த சி3!

எஸ் 3 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எஸ் 3

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+