»   »  சிங்கம் 3 ரூ.100 கோடி வசூல்: ஹரியை வெயிட்டா கவனித்த சூர்யா

சிங்கம் 3 ரூ.100 கோடி வசூல்: ஹரியை வெயிட்டா கவனித்த சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம் 3 படம் ஹிட்டாகியுள்ளதையடுத்து சூர்யா இயக்குனர் ஹரிக்கு டொயோட்டா பார்ச்சூனர் காரை பரிசளித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

Suriya gifts a car to Hari

இந்நிலையில் சிங்கம் 3 வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை அளித்த ஹரியை பாராட்டி சூர்யா அவருக்கு டொயோட்டா பார்ச்சூனர் காரை பரிசளித்துள்ளார்.

Suriya gifts a car to Hari

ஹரியின் வீட்டிற்கே சென்று காரை பரிசளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் சூர்யா. சூர்யா ஹரிக்கு கார் பரிசளித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

சிங்கம் ஹிட்டானதால் சூர்யாவை விட அவரது ரசிகர்கள் அதி உற்சாகமாக உள்ளார்கள்.

English summary
Suriya has gifted a car to director Hari after Singam 3 collects Rs. 100 crore within six days of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil