»   »  என்னாது, சிங்கம் 3 ரூ.100 கோடி வசூலித்துவிட்டதா?

என்னாது, சிங்கம் 3 ரூ.100 கோடி வசூலித்துவிட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை:

சிங்கம் 3 படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது. தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருப்பதால் சூர்யா படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

Singam 3

படம் ரிலீஸான அன்று எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. பல தியேட்டர்களில் கூட்டம் இல்லை. சில தியேட்டர்கள் காத்து வாங்கின. இந்நிலையில் படம் ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டதாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்டுடியோ கிரீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வழக்கமான வியாழக்கிழமையில் ரிலீஸாகி சிங்கம்3 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Studio Green tweeted that, 'Releasing on a Normal Thursday #Si3Hits100CRIn6Days ! Thank you for all the support Fans🙏 Suriya_offl rajsekarpandian Jharrisjayaraj'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil