X
விக்ரம்

விக்ரம்

Action | 03 Jun 2022 | U/A | 174 Mins
Tamil

2.6 /5 Users

4 /5 Filmibeat

விக்ரம் கதை

விக்ரம் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை நடிகர் கமல் தனது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். முற்றிலும் அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். விக்ரம் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் (ஆடை இயக்குனர்) இணைந்து வசனங்கள் எழுதியுள்ளனர். கமல் தயாரிப்பில் உருவான இப்படத்தினை தமிழகம் முழுவதும் ரெட் கெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி விநியோகம் செய்துள்ளார். இப்படம் யு/எ சான்றிதழ் பெற்று 2022 ஜூன் 3ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் படக்குழு/நட்சத்திரங்கள் பற்றிய தகவல்கள் விக்ரம் திரைப்படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் வீடியோக்கள் விக்ரம் படத்தின் புகைப்படங்கள் விக்ரம் திரைப்படத்தின் கதை கர்னல் விக்ரம் கமல்ஹாசனை அப்பாவாக தத்தெடுத்து வளர்க்கும் மகன் காளிதாஸ் ஜெயராம் காட்சிகளுடன் தான் படம் ஆரம்பமாகிறது. காளிதாஸின் மனைவி சோகமாகவே உள்ளார். அவரது குழந்தைக்கு இதயத்தில் கோளாறு அதை கனிவாக பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல்.  படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே காளிதாஸ் கொல்லப்படுகிறார். அதன் பின்னர், கமலையும் முகமூடி அணிந்து செயல்படும் கேங் கொல்வதாக காட்டுகின்றனர். கமலையும் காளிதாஸையும் கொல்லும் அந்த கேங் யார் என்பதை கண்டுபிடிக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ் போலீஸ் அதிகாரியாக பகத் ஃபாசில் வருகிறார். முதல் பாதியில் அவரது விசாரணை காட்சிகள் தான் படத்தை அதிகளவில் கொண்டு செல்கிறது. அவருக்கு மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். பிக் பாஸ் ஷிவானி நாராயணன், மகேஷ்வரி மற்றும் மைனா நந்தினி என மூன்று மனைவிகளுடன் பிரம்மாண்ட வீட்டில் கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கும் வியாபாரி சந்தானமாக (விஜய்சேதுபதி) மிரட்டுகிறார்.  முகமூடி போட்டுக் கொண்டு கொலை, கொள்ளைகளை செய்யும் கூட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பகத் ஃபாசில் இறங்கி இருப்பார். ஆரம்பத்தில், முகமூடி அணிந்த நபரை பிடித்து விட்டு அதை கழட்டி பார்த்தால் நரேன் இருப்பார். ஆனால், அதன் பின்னரும், முகமூடியின் வேட்டை தொடரும், யாரு அந்த கோஸ்ட் என தேடும் பகத் ஃபாசிலுக்கு இன்டர்வெல் பிளாக்கில் செம சர்ப்ரைஸ். மகனை கொன்றவர்களை பழி வாங்கும் தந்தையாக விக்ரம் கமல் போராடுவது தான் படத்தின் கதையாக இருக்கும் என நினைக்கும் இடத்தில் செம ட்விஸ்ட் கொடுத்து, ஒட்டுமொத்த போதைப் பொருட்களையும் அழித்து No Drugs Society ஆக மாற்றும் யுத்தத்தை கமல் செய்வது தான் விக்ரம் படத்தின் மூலக் கதை.
Read More

விக்ரம் நடிகர்கள் & படக்குழுவினர்

விக்ரம் அணியின் தகவல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
கதை லோகேஷ் கனகராஜ்
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்
தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் கமல் ஹாசன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

விக்ரம் விமர்சகர்களின் விமர்சனம்

சினிஉலகம்
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு விக்ரம்
அனந்த விகடன்
தமிழ் சினிமாவில் ஒரு யுனிவர்ஸைக் கட்டமைப்பது எனச் சில பரீட்சார்த்த முயற்சிகளுடன் களம் இறங்கியிருக்கிறான் இந்த 'விக்ரம்'.
மாலை மலர்
மொத்தத்தில் 'விக்ரம்' வின்னர்.
தினமலர் - சினிமா
விக்ரம் - வியக்குறோம்...
Asianet நியூஸ் தமிழ்
மொத்தத்தில் ‘விக்ரம்’ கோலிவுட்டே கொண்டாடக்கூடிய படமாக அமைந்துள்ளது.

விக்ரம் ட்ரெய்லர்

Video Thumbnail

விக்ரம் பாடல்கள்

விக்ரம் செய்திகள்

விக்ரம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

விக்ரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+