இலங்கையில் இனங்கள் சங்கமித்த இசை சங்கமம் பாடல் வெளியீட்டு விழா!
சென்னை: கவிஞரும் , தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய பாடல்களின் வெளியீட்டு விழா கடந்த வெள்ளி மாலை Colombo City Center - Scope Cinima திரையரங்கில் நடைபெற்றது.

இலங்கையின் முன்னணி தொலைக்காட்சியான தெரணTv பெரும் பொருட்செலவில் உருவாக்கியுள்ள பாடல்களுக்கு நிமேஸ், சத்துரங்கன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.
பாடல்களை கோகுலன் சாந்தன்( யாழ்ப்பாணம்),சுதர்சினி கோணேஸ்வரன்(திருகோணமலை) குகனேஸ்வரன்(பதுளை) சாதீர் அஹமட் (கொழும்பு) ரவி ரொயிஸ்ட்டர் (மாத்தறை) ஆகியோர் பாடியுள்ளனர்.
கலைகள் ஊடாக இன ஐக்கியத்தை ஏற்படுத்தி இலங்கை மண்ணை செழுமையாக்குவோம் என்ற தொனிப்பொருளில் தெரணTv பிரதித்தலைவரும் பிரதம நிறைவேற்று பணிப்பாளருமான லக்சிரிவிக்ரமகே அவர்களின் எண்ணக்கருவில் உருவான "இசை சங்கமம்" நான்கு பாடல்களிலும் இலங்கையின் அனைத்து சமூகத்தை சேர்ந்த கலைஞர்கள் நான்கு திசைகளிலும் இருந்து பங்களிப்பு செய்துள்ளனர்.

பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு இலங்கையின் பிரபல கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
பாடல்களை தெரணTv நிறுவனத்தின் அதிபர் திரு.டிலித் ஜெயவீர அவரது துணைவி நெலும் ஜெயவீர, நிறுவனத்தின் பிரதித்தலைவர் லக்சிரி விக்ரமகே, நிகழ்ச்சிப்பிரிவு இயக்குனர் சர்மிளா தர்மராசா ஆகியோர் இணைந்து eTunes.lk யூடியுப் தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுவைத்தனர்.
"நானாக நானில்லை","மொட்டுவிட்ட பூங்கொடி","நிலவா நட நடந்து", "துள்ளி எழுந்திடு தோழா" ஆகிய பாடல்கள் தமிழ் இசை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











