மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷின் படு ரொமான்டிக்கில் உருவாகி உள்ள கலாவதி பாடல்.. தமன் பின்னிட்டாரு!
ஹைதரபாத்: டோலிவுட், கோலிவுட் என தனது இசையால் சினிமா உலகை அதிரவைத்து வருகிறார் இசையமைப்பாளர் தமன்.
இசையமைப்பாளர் தமனும் பாடகர் சித் ஸ்ரீராமும் இணைந்து விட்டால் அந்த பாடல் வேற லெவல் ஹிட் என்பதை எழுதி கொடுத்து விடலாம்.
கூடவே டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்தால் சும்மாவா சொல்ல வேண்டும் காதலர் தின ட்ரீட்டாக தற்போது வந்துள்ளது சர்காரு வாரி பாட்டா படத்தின் கலாவதி பாடல்.

மகேஷ் பாபு படம்
கீதா கோவிந்தம் பட இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் செம ரொமான்டிக்காகவும் மாஸாகவும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்ட மகேஷ் பாபு தனது அடுத்த பட வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். சர்காரு வாரி பாட்டா என உருவாகி உள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

காதலை சொல்லும் கலாவதி
காதலர் தினத்தை முன்னிட்டு தனது ரசிகர்களை சும்மா தவிக்க விடக் கூடாது என நினைத்த மகேஷ் பாபு, கலாவதி பாடல் லிரிக் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் ரொமான்டிக்கில் கல்யாண களைகட்டும் பாடலாக கலாவதி காதலை சொல்லி வருகிறது. மாங்கல்யம் தந்துனானே தான் ஓப்பனிங் லிரிக்ஸே!

தமன் பின்னிட்டாரு
அலா வைகுந்தபுரமுலோ, அகண்டா என இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம்கள் எல்லாம் வேற லெவலில் மிரட்டி வரும் நிலையில், மகேஷ் பாபுவுக்காக ஸ்பெஷல் இசையை தெறிக்கவிட்டு இருக்கிறார் தமன். வேட்டி சட்டையில், பியானோவை வாசிக்கும் தமனின் காட்சிகள் லிரிக் வீடியோவில் அட்டகாசம்.

சித் ஸ்ரீராம் இல்லாமலா
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அனிருத் மற்றும் சித் ஸ்ரீராம் பாடும் பாடல்கள் தான் அடுத்த நொடியே டிரெண்டாகி விடுகின்றன. தமன் இசை என்றதும் சித் ஸ்ரீராம் இல்லாமல் இருப்பாரா? தலையில் குடுமியுடன் வித்தியாசமான தோற்றத்தில் பாட்டு பாடி அசத்தி உள்ளார் இந்த லிரிக் வீடியோவில். சும்மா அள்ளுது!

லவ்லி கீர்த்தி
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு பெரிய வெற்றியை ருசிக்காமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்து மீண்டும் அவரது மார்க்கெட்டை பிடித்துத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாவதி பாடலில் செம லவ்லியாக வந்து செல்லும் கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு ரசித்து வருகின்றனர்.
Recommended Video

அரபிக் குத்து ஆன் தி வே
மகேஷ் பாபுவின் கலாவதி பாடல் இன்றே வெளியாகி உள்ள நிலையில், கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களை குஷிப்படுத்த காதலர் தினமான நாளை அரபிக் குத்து பாடலுடன் தளபதி விஜய் ஆன் தி வே. நாளை காலை 11 மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











