#50daysofKarnan வைரலாகும் ஹேஸ்டாக்… தனுஷ் ரசிகர்கள் குஷி !
சென்னை : மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் வெளியாகி 50வது நாளை எட்டி உள்ளது.
இதனை தனுஷ் ரசிகர்கள் கர்ணன் புகைப்படத்தை பதிவிட்டும், தனுஷூன் புகைப்படத்தை பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
மேலும், 50daysofKarnan என்ற ஹேஸ்டாக் படு வேகமாக பரவி வருகிறது.

இயக்கத்தில்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ராஜிஷா விஜய், யோகி பாபு, லால்,நட்டி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

வசூல்சாதனை படைத்தது
இந்நிலையில் கடந்த மாதம் வெளியான கர்ணன் திரைப்படம், கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் கர்ணன் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

பாராட்டு
கர்ணன் திரைப்படத்தை தனுஷின் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு தனுஷூக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.
50வது நாள்
இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 50 நாள் ஆவதை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார். மேலும் தனுஷூன் ரசிகர்கள் #50daysofKarnan என்ற ஹேஸ்டாக் டிரெண்டாகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இது தீயாக பரவி வைரலாகி வருகிறது. பெரும் தனுஷூக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











