twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விவசாய வறட்சி, கார்ப்பரேட் வளர்ச்சி.. துணிந்து அரசியல் பேசிய விஜய்… 8 Years of கத்தி ஃப்ளாஷ்பேக்

    |

    சென்னை: விஜய் நடிப்பில் 2012ல் வெளியான துப்பாக்கி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

    துப்பாக்கியை தொடர்ந்து விஜய் - இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான திரைப்படம் கத்தி.

    2014ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான கத்தி, 8 ஆண்டுகளை கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    யாஷ் கைகளில் துப்பாக்கி… தெறிக்கும் தோட்டாக்கள்… அடேங்கப்பா இவரு நெஜமாவே டான் தான் போல!யாஷ் கைகளில் துப்பாக்கி… தெறிக்கும் தோட்டாக்கள்… அடேங்கப்பா இவரு நெஜமாவே டான் தான் போல!

    ஸ்லீப்பர் செல் டூ விவசாய புரட்சி

    ஸ்லீப்பர் செல் டூ விவசாய புரட்சி

    மாஸ் ஹீரோயிஸம் கொண்ட படங்களில் நடிப்பதில் விஜய்க்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். தீனா, ரமணா என ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஏஆர் முருதகாஸுடன் முதன்முறையாக துப்பாக்கி படத்தில் இணைந்தார் விஜய். 2012ல் வெளியான இந்தப் படம் ஸ்லீப்பர் செல், தீவிரவாதி என மசாலத்தன்மையுடன் உருவாகியிருந்தது. ஆனால், ராணுவ வீரராக விஜய்யின் நடிப்பும், ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் 'கத்தி.' லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் 2014 தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியானது.

    கார்ப்பரேட்டுகளின் அசுர வளர்ச்சி

    கார்ப்பரேட்டுகளின் அசுர வளர்ச்சி

    விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படத்தில், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் பல தடைகளை கடந்து தான் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. கதிரேசன், ஜீவானந்தம் என்ற கேரக்டர்களில் நடித்த விஜய்க்கு, ஆக்சன் பெர்ஃபாமன்ஸ் செய்யவும், புரட்சிகரமான அரசியல் வசனங்கள் பேசவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. விவசாயத்தை அழித்து கார்ப்ரேட்டுகள் எப்படி அசுர வளர்ச்சி பெறுகின்றன என்பது தான் கத்தி படத்தின் ஒன்லைன். இதில் ஆள்மாறாட்டம், இருட்டில் சில்லறைகளை சிதறவிட்டு தாறுமாறான ஆக்சன் சீன்ஸ், இறுதியாக அரசியல் வசனங்கள் என அழுத்தமான பாத்திரத்தில் ஸ்கோர் செய்தார் விஜய்.

    அந்த இட்லி கதை

    அந்த இட்லி கதை

    கத்தி படத்தில் அரசியல் வசனங்கள் ஒவ்வொன்றும் அனல் பறந்தன, அதேநேரம் கம்யூனிஸம் குறித்து விளக்கம் கொடுக்க விஜய் சொன்ன அந்த இட்லி கதை, இன்றும் மீம் கிரியேட்டர்களுக்கு தரமான கண்டெண்ட் கொடுத்து வருகின்றது. விவசாயிகளை ஒன்றுதிரட்டி அரசு இயந்திரத்தையே முடக்க முடியும் என தண்ணீர் குழாய்க்குள் இறங்கி கலகம் செய்ய வைத்ததெல்லாம் ஏஆர் முருகதாஸின் அதீத கற்பனை என்றே சொல்லலாம். கத்தி பேசிய அரசியல் எல்லோருக்கும் புரிந்ததோ இல்லையோ, விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் பக்கா கமர்சியல் எண்டர்டெயின்மெண்ட்டாக இந்தப் படம் அமைந்தது.

    கதையும் திருட்டு

    கதையும் திருட்டு

    கத்தி படம் முழுக்க விவசாயிகளிடம் கார்ப்ரேட்டுகள் எப்படி சுரண்டுகின்றன, தண்ணீர் திருட்டு, காற்று திருட்டு என பல பாடங்கள் எடுத்த ஏஆர் முருதாஸ், இறுதியாக கதை திருட்டிலும் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்பட்டார். சுரண்டல்கள் எல்லா இடங்களிலும் இருக்கும் என்பதற்கு இந்த கதை திருட்டு விவகாரமும் ஒரு எடுத்துக்காட்டு. இதையும் தாண்டி விஜய்யின் ஆக்சன் காட்சிகளும், சில மாஸ்ஸான சீன்ஸும் இன்றும் ரசிகர்களால் கத்தி படத்தை கொண்டாட வைக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள், பிஜிஎம், சமந்தாவின் க்யூட்னஸ், சதீஷின் சில மொக்கை காமெடிகள் என 8 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிற்கிறது விஜய்யின் கத்தி.

    English summary
    Vijay starrer Kaththi film was released on Diwali 2014. AR Murugadoss Directed this film is seen as an important film in Vijay's career. It has been 8 years since the release of this film which was well-received by the fans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X