»   »  மெர்சல் ரிலீஸில் இப்படி ஒரு சிக்கல்?

மெர்சல் ரிலீஸில் இப்படி ஒரு சிக்கல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதுதான் டைட்டில் பிரச்னை முடிஞ்சுடுச்சே... சென்சார் சர்டிஃபிகேட்டே வந்துடுச்சு... இனிமே என்னய்யா சிக்கல் என்கிறீர்களா? ரிலீஸ் தேதியில்தான் ஒரு சின்ன குழப்பம் இருக்கிறதாம்.

பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் படங்களை ரிலீஸ் பண்ணும்போது ஓரிரு நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். முந்தைய இரு நாட்களும் ரசிகர்களை வைத்து எளிதில் கல்லா கட்ட முடியும். பண்டிகை அன்றும் அதற்கு பிறகு இரண்டு நாட்கள் விடுமுறை வந்தால் அந்த இரண்டு நாட்களும் பொது மக்கள் வருவார்கள். திட்டமிட்டபடி கல்லா கட்டலாம். இதுதான் வழக்கமாக நடப்பது.

A small confusion in Mersal release

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி புதன் கிழமை வருகிறது. அதற்கும் இரண்டு நாட்கள் முன்பே ரிலீஸ் செய்வதாக இருந்தால் திங்கட்கிழமைதான் ரிலீஸ் செய்ய வேண்டும். அப்படி ரிலீஸ் செய்வதற்கு பதிலாக வெள்ளிக்கிழமையே கூட ரிலீஸ் செய்துவிடலாம்.

தீபாவளி அன்று ரிலீஸ் செய்தால் விஜய் ரசிகர்கள்தான் இரண்டு விடுமுறை நாட்களை ஆக்ரமித்துக்கொள்வார்கள். மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை வேலை நாள் எனவே அன்று பொதுமக்கள் தியேட்டர்களை நிரப்புவார்களா? என்பது சந்தேகம்தான். படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளதால் முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடி வசூலைப் பார்த்தே ஆக வேண்டும். இதுபோன்ற பல சிக்கலில் மாட்டியுள்ளதால் தான் இன்னமும் தேதியை விளம்பரங்களில் குறிப்பிடாமல் தீபாவளி ரிலீஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

சமீபத்திய தகவல்படி புதன் கிழமையே ரிலீஸ் செய்யலாம் என்று விஜய் சொல்லியிருப்பதாக செய்தி வருகிறது.

English summary
A small confusion in finalising the release date of Diwali magnum opus Marsal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil