மதுரை மண்ணில் தனுஷ்.. விஜய்க்கு வேல் கொடுத்தது போலவே இவருக்கும் வேல் கொடுத்த ரசிகர்கள்.. தரமான வீடியோ!

மதுரை: நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கி, டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரித்தும் உள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் அவர் நடித்தும் உள்ளார். படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருக்கும் பட்சத்தில் இன்று அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி அவர் மதுரைக்கு படத்தின் புரோமோசனுக்காக சென்றார். இதை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அவருக்கு வேல் கொடுத்தார். அதை தனுஷ் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் நான்காவது படம் இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலும் டிரைலர் வெளியீட்டு விழா கோவையிலும் நடைபெற்றது. இப்படி இருக்கும்போது படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Actor Dhanush Went Madurai His Fans Gives Special Welcome And Present Murugar Vel

தனுஷ்க்கு சோதனை: படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது. கேரளாவில் படம் தமிழிலேயே ரிலீஸ் ஆகவுள்ளது எனக் கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது படத்திற்கு உள்ள சவால் என்பது, ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமான காந்தாரா படத்தின் அடுத்த பாகம் வெளியாக உள்ளது. இந்த படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதுதான். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இட்லி கடை படம் மிகவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் எடுபடும் இல்லை என்றால் தனுஷ்க்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் என திரைத்துறையில் பேச்சு அடிபடுகிறது.

Actor Dhanush Went Madurai His Fans Gives Special Welcome And Present Murugar Vel

வேல் கொடுத்து வரவேற்பு: இட்லி கடை படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் இருக்கும் பட்சத்தில் இன்று அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி அவர் மதுரைக்கு படத்தின் புரோமோசனுக்காக சென்றார். இதை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அவருக்கு வேல் கொடுத்தார். அதை தனுஷ் பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அவருக்கு வரவேற்பு அளித்த ரசிகர்கள் அவருக்கு வேல் கொடுத்ததைப் பார்த்த இணையவாசிகள், இப்போது எல்லாம் நடிகர்களுக்கு ரசிகர்கள் வேல் கொடுப்பது என்பது டிரெண்டிங் போல எனப் பேசி வருகிறார்கள். அதாவது, நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணப் படுகிறார். அப்படி இருக்கும்போது, அவரது ரசிகர்கள் அவருக்கு வேல் கொடுக்கிறார்கள். அதேபோலத்தான் தற்போது தனுஷ்க்கும் கொடுத்துள்ளார்கள் என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X