Just In
- 7 min ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 17 min ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 23 min ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 1 hr ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Sports
பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோட் சூட்டில் அட்டகாசமாய் என்ட்ரி கொடுத்த விஜய்.. களைகட்டிய லீலா பேலஸ்.. ஒரே ஜாலிதான் போங்க!
சென்னை: மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கோட் சூட்டில் அசத்தலாய் பங்கேற்றுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
பிரபல நடிகரான விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக மோதியிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பிரபலங்கள்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் நிகழ்ச்சி சிம்பிளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டு விழா முன்னிட்டு பிரபலங்கள் பலரும் லீலா பேலஸில் குவிந்து வருகின்றனர்.

கோட் சூட்டில்
இதில் நடிகர் விஜய், மாளவிகா மோகனன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் கறுப்பு நிற கோட் சூட்டில் அசத்தலாய் பங்கேற்றிருக்கிறார். விஜய் கோட் சூட்டில் பக்கா புரபேஷனலாக பங்கேற்ற வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டிப்பிடித்து..
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் பெற்றோரான எஸ்ஏ சந்திரசேகரும் ஷோபாவும் பங்கேற்றுள்ளனர். இசை வெளியீட்டு மேடைக்குச் சென்ற விஜய்யின் தாய், தந்தையிடம் உங்கள் ஆசை என்ன என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேட்க, விஜயைக் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார். உடனே மேடைக்குச் சென்று தனது பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் விஜய்.

பிடித்த பாடல்
நிகழ்ச்சியில் பேசிய விஜயின் தாயார் ஷோபா, காதலுக்கு மரியாதை படத்தில் ‘ஓ பேபி' பாடலும், மாஸ்டர் படத்தில் ‘குட்டி ஸ்டோரி' பாடலும் தனக்கு மிகவும் பிடித்தவை என கூறியுள்ளார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டண்ட் சில்வா, தளபதி பாசத்தால எல்லாத்தையும் அடிப்பாரு என கூறினார்.

விஜய் சேதுபதி
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் பிரபல நடிகரான விஜய் சேதுபதியும் கறுப்பு நிற உடையிலேயே நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி நடிகர் விஜயை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் அந்த போட்டோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.