நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறேன்.. புதுமுக நாயகியின் அதிர்ச்சி பேச்சு!

சென்னை : "மெய்ப்பட செய்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள மதுனிகா, நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்திருக்கும் படம் 'மெய்ப்பட செய்'. அறிமுக இயக்குநர் வேலன் இயக்கியிருக்கும் இப்படம் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதில், புதுமுக நாயகி மதுனிகா, ராஜ்கபூர், ஆடுகளம் ஜெயபால், ஓ. ஏ.கே.சுந்தர், பெஞ்சமின் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மெய்ப்பட செய்

மெய்ப்பட செய்

கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள். இங்கே நடக்கும் அநியாயங்களையும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களையும் பார்த்து கொதித்துப்போய், இந்த கொடுமைகளை தட்டிக்கேட்க அவர்களே களத்தில் இறங்குகிறார்கள். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை சட்டம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்கான நியாயம் உடனடியாக கிடைக்கிறதா? என்ற பல கேள்விகளோடு உருவாகியிருக்கும் படம் தான் மெய்ப்பட செய்.

ஜூலை 15ந் தேதி ரிலீஸ்

ஜூலை 15ந் தேதி ரிலீஸ்

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் ஜூலை 15ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

நடிக்க பயந்தேன்

நடிக்க பயந்தேன்

'மெய்ப்பட செய்' படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் கதாநாயகி மதுனிகா, இந்த கதை ரொம்பவே இண்டன்ஷாக இருந்தது. படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போது நான் பயந்துவிட்டேன். இந்த கதையில் என்னால் நடிக்க முடியுமா? என்று தோன்றியது. ஆனால், இயக்குநர் தான் எனக்கு தைரியம் கொடுத்து உங்களால் நடிக்க முடியும், நடியுங்கள் என்றார். அவர் கொடுத்த தைரியத்தால் என்னால் இந்த படத்தில் நடிக்க முடிந்தது.

அதிர்ச்சித்தகவல்

அதிர்ச்சித்தகவல்

இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாலியல் கொடுமைகள் அனைத்து பெண்களுக்கும் எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை அனுபவித்து வருகிறார்கள். நானும் கூட பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். இதனால், இந்த படம் அனைவரையும் பாடமாக இருக்கும் அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய படம் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X