அஜித் கூட இப்படி ஆடலியே...ஆலும்மா டோலும்மா பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட அதிதி ஷங்கர்
சென்னை : பிரம்மாண்ட டைரக்டர் என பெயர் வாங்கிய டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர். இவர் டைரக்டர் முத்தையா இயக்கிய விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
Recommended Video
முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடி, சூர்யா தயாரிப்பில் நடித்துள்ளார். பக்கா கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார். முதல் பட ரிலீசுக்கு முன்பே செம பிரபலமாகி விட்டார்.
ஏற்கனவே அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அதிதி, விருமன் ரிலீசுக்கு பிறகு இவருக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மனதையும் அதிதி கவர்ந்து விட்டார்.

அடுத்த படத்திற்கு தயாராகிட்டார்
விருமன் படத்திற்காக வாழ்த்து மழையில் நனைந்து வரும் அதிதி, விரைவில் தனது அடுத்த படமான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்க உள்ளார்.

வைரலான அதிதியின் பிடிஎஸ் வீடியோ
இந்த சமயத்தில் விருமன் பட ஷுட்டிங்கின் போது அதிதி மற்றும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் வெளியாகி செம வைரலானது. அதிதி நல்லா பாடுவார் தெரியும், இவ்வளவு சூப்பரா...அதுவும் தர லோக்கலாக குத்தாட்டம் போடுவார் என இத்தனை நாள் யாரும் சொல்லவே இல்லையே என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வந்தனர்.

என்ன ஆட்டம்டா சாமி
இந்நிலையில் அதிதி தனது இன்ஸ்டா பக்கத்தில், பேண்ட் சட்டையில் மேடை ஏறி, வேதாளம் படத்தில் அஜித் ஆடிய ஆலுமா டோலுமா பாடலுக்கு செம கலக்கலாக குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அதிதியுடன் இணைந்து இன்னும் சில மாணவர்களும் ஆடுகிறார்கள்.அதிதியின் இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

ரெண்டு ஸ்டெப் போடாமயா வந்திருவோம்
இந்த வீடியோவுடன் அதிதி, இன்று மீண்டும் காலேஜூக்கு திரும்பி வந்திருக்கேன். ஆனால் மாணவியாக இல்லை. ஸ்பெஷல் கெஸ்டாக. அவ்வளவு தூரம் போயிட்டு...ரெண்டு ஸ்டெப் போடாமயா வந்திருவோம்? இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் டான்ஸ் அதிதி
இதற்கு ரசிகர்கள் லைக்குகள் வாரி வழங்கி வருவதுடன், வெறித்தனம். டான்ஸ் சூப்பர். விருமனில் நீங்க போட்ட ஆட்டத்தை பார்த்து மிரண்ட நாங்க இன்னும் தெளியல. அதுக்குள்ள ஆலுமா டோலுமா பாட்டுக்கு இப்படி ஆட்டம் போட்டிருக்கீங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











