For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எப்படிப்பா இப்படி யோசிக்கிறீங்க...கொளுத்தி போடும் நெட்டிசன்கள்...நேற்று விஜய், இன்று தனுஷா ?

  |

  சென்னை : டாப் நடிகர்களின் புதுப்படங்கள் பற்றிய அறிவிப்பு, போஸ்டர், பாடல் வெளியானால் அதை ரசிகர்கள் ஒரு புறம் கொண்டாடி வரும் நிலையில், மற்றொரு புறம் அதையே வைத்து புதுப் புது பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் கிளப்பி விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் இது போன்ற விஷயங்கள் தான் பெரிய விவாதம் ஆகி உள்ளது.

  தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் இதுவரை முடங்கி கிடந்த பட வேலைகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. படத்தின் ஷுட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள், ரிலீஸ் வேலைகள் என கோலிவுட்டே புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. படங்களின் ரிலீஸ் தேதிகளையும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து வருகிறார்கள்.

  அரபிக்குத்து பாடல் சர்ச்சை.. இதெல்லாம் ஒரு குத்தமா?... பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் ! அரபிக்குத்து பாடல் சர்ச்சை.. இதெல்லாம் ஒரு குத்தமா?... பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் !

  இதற்கிடையில் டாப் ஹீரோக்களும் அடுத்தடுத்து பல படங்களை நடித்து வருகிறார்கள். இந்த படங்களின் அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அப்படி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள், ரசிகர்கள் பல மாதங்களாக கேட்ட பிறகு, காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அரபிக்குத்து என டைட்டில் வைக்கப்பட்ட இந்த மாஸ் எனர்ஜி பாடல், யூட்யூப்பில் இதுவரை இருந்த சாதனைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளது.

   அரபிக்குத்தை பார்த்து அசந்த ரசிகர்கள்

  அரபிக்குத்தை பார்த்து அசந்த ரசிகர்கள்

  ரசிகர்கள் ஒரு புறம் அரபிக்கத்தை டிரெண்டாக்கி வருகிறார்கள் என்றால், பிரபலங்கள் பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அர்த்தம் புரியவில்லை என்றாலும் விஜய் இருக்கிறாரோ. அவரின் ஸ்டைல், டான்ஸ் போதாதா என ரசித்து வருகிறார்கள். அனைவரும் விஜய், பூஜா ஹெக்டேவின் டான்ஸ், அனிருத்தின் இசை, சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளை பார்த்து பார்த்து பாராட்டி வருகின்றனர்.

   அரபிக்குத்தில் இப்படி ஒரு உள்குத்தா

  அரபிக்குத்தில் இப்படி ஒரு உள்குத்தா

  ஆனால் நெட்டிசன்களில் ஒரு கூட்டம், அந்த பாடலில் விஜய்யின் கழுத்தில் அணிந்திருந்த டாலரை கவனித்து சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. விஜய் தனது கழுத்தில் சிலுவை மற்றும் பிறை இரண்டு இணைந்திருப்பது போன்ற டாலரை அணிந்திருக்கிறார். இதை கவனித்து, அதை அரசியல் ஆக்கி, மதம் தொடர்பான சர்ச்சையை கிளப்பி உள்ளனர். இதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  யாருடா நீங்கெல்லாம்

  யாருடா நீங்கெல்லாம்

  நாங்க விஜய்யின் டான்ஸ் மட்டும் தான் பார்த்தோம். நீங்க எப்படிடா இதையெல்லாம் கவனிக்கிறீங்க. உங்க கண்ணுல மட்டும் எப்படிடா இது மாதிரி விஷயமெல்லாம் படுது. எப்படிடா இப்படி யோசிக்கிறீங்க. யாருடா நீங்கெல்லாம்...எங்கடா இருக்கீங்க என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

  சாப்பிட்டது ஒரு குற்றமாடா

  சாப்பிட்டது ஒரு குற்றமாடா

  நேற்று விஜய்யை வைத்து தான் பிரச்சனையை கிளப்பினார்கள் என்றால், இன்று தனுஷை வைத்து அடுத்த பிரச்சனையை கொளுத்தி போட்டுள்ளனர். தனுஷ், ஐதரபாத்தில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டதை யாரோ போட்டோ எடுத்து போட, அதை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்துக் கொண்டிருந்தனர். இதில் இடையில் புகுந்த சிலர், ஓட்டலில் தனுஷ் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் போட்டோவையும் சேர்த்துப் போட்டு, யார் இந்த பெண் என புது பிரச்சனையை கிளப்பி உள்ளனர்.

  Recommended Video

  முன்னொரு காலத்தில் Episode01 | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi | Oneindia Tamil
  அவரையும் விட்டு வைக்கலியா

  அவரையும் விட்டு வைக்கலியா

  இதை பார்த்த ரசிகர்கள், அடப்பாவிகளா...சம்பந்தமே இல்லாமே ஏன்டா இப்படியெல்லாம் கொளுத்தி போடுறீங்க. அவர் பாட்டுக்கு அமைதியாக உட்கார்ந்து சாப்பிடுறார். அதை ஏன்டா இப்படி வில்லங்கம் பண்ணுறீங்க. பாவம் அவரே ஏற்கனவே மனைவியை பிரிவதாக அறிவித்து விட்டு, ஏகப்பட்ட வதந்திகளில் சிக்கி நொந்து போய் உள்ளார். அவரையும் நீங்க விட்டு வைக்கலயாடா என ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

  English summary
  Netizens create controversy on Vijay's dollar in arabic kuthu song. In this song vijay wear religious symbol. netizens noticedc this and makes controversy. After vijay, now dhanush also is in controversy. dhanush's dining photo also in controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X