»   »  அமலா பால் 'அந்த' நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளாரா?: விஜய் விளக்கம்

அமலா பால் 'அந்த' நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளாரா?: விஜய் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா பால் எந்த ஒரு நடிகரின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

ஒன்றாக சேர்ந்து பணியாற்றியபோது இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலில் விழுந்தனர். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

Amala is not under any actor's control: AL Vijay

இந்நிலையில் திருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் கூறியும் அமலா அதை கேட்காததால் அவர்களின் திருமண உறவு முறிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே அமலா இளம் நடிகர் ஒருவரின் பேச்சை கேட்டு நடப்பதாகவும், அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது. இது குறித்து விஜய்யிடம் கேட்டதற்கு, அமலா எந்த நடிகரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அந்த தகவலில் உண்மை இல்லை என்றார்.

பிரிந்தாலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் குறை கூறக் கூடாது என அமலாவும், விஜய்யும் முடிவு செய்துள்ளனர்.

English summary
Director AL Vijay has rubbished the news that Amala Paul is under the control of a young hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil