இந்த வாரம் அண்ணாச்சிக்கும் பிரியங்காவுக்கும்தான் போல.. கேப்டன் டாஸ்க்கில் களைக்கட்டிய வார்த்தை போர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெறுவது தெரியவந்தது. இதில் கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான பிரியங்கா, சிபி, ஐக்கி பெர்ரி மற்றும் நிரூப் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
முதல் புரமோவில் தாமரை செல்விக்கும் நிரூப்புக்கும் இடையே மோதல் வெடித்தது தெரியவந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

உங்களின் கைப்பாவை ஆகிவிடுவேன்
இதில் அண்ணாச்சியிடம் பிரியங்கா கேப்டன் ஆகக்கூடாது என்று பேசும் நிரூப், பிரியங்கா அண்ணாச்சி குறித்து பேசியதை கூறுகிறார். அதன்படி நான் உங்களின் கைப்பாவை ஆகிவிடுவேன், நீங்கள் என்னை கன்ட்ரோல் பண்ண நினைக்கிறீர்கள் என்றெல்லாம் கூறினார். அதுபோல் நீங்களும் நினைத்ததில்லை நானும் நினைத்ததில்லை என அண்ணாச்சியிடம் கூறுகிறார் நிரூப்.

பிரியங்காவிடம் புரிதல் குறைவு
அப்போது குறுக்கிடும் பிரியங்கா, அந்த காரணத்திற்காகதான் நான் அவரை கடைசியாக வருமாறு கூறினேன் என்று கூறி நக்கலாக சிரிக்கிறார். இதையெல்லாம் கேட்ட அண்ணாச்சி இந்த புரிதல் பிரியங்காவிடம் குறைவாகதான் இருக்கிறது என்று கூறி கையில் வைத்திருந்த தண்ணீரை பிரியங்காவின் குடுவையில் ஊற்றிச் செல்கிறார்.

எதுவுமே எதிர்பார்க்க மாட்டேன்
அதனை தொடர்ந்து பேசும் பிரியங்கா, நன்றி அண்ணாச்சி உங்கள் வார்த்தையை நீங்கள் எப்படி மாற்றுவீர்கள் என்பது எனக்கு தெரிந்து விட்டது. இனிமேல் சத்தியமா உங்கக்கிட்ட எதுவுமே எதிர்பார்க்க மாட்டேன் என்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.

ஏற்கனவே பனிப்போர்..
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அண்ணாச்சிக்கும் இசைவாணிக்கும் இடையே முட்டலும் மோதலுமாக உள்ளது. தாமரை செல்வியும் அண்ணாச்சியின் மீது மன வருத்தத்தில் உள்ளார். இதேபோல் பிரியங்காவும் அண்ணாச்சிக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப் போர் நிலவி வந்தது. இந்நிலையில் இருவரும் தற்போது நேருக்குநேராகவே மோதிக் கொள்ள தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











