»   »  'மெர்சல்' நீதானே பாடலில் சமந்தா... - நாளை வெளியாகிறது சிங்கிள் ட்ராக்!

'மெர்சல்' நீதானே பாடலில் சமந்தா... - நாளை வெளியாகிறது சிங்கிள் ட்ராக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. 'மெர்சல்' விஜய்யின் 61 -வது படம். கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நான்கு மணிக்கு படத்தின் மெலடி சாங் பற்றிய அறிவிப்பு வரும் என அட்லீ ட்வீ ட் செய்திருந்தார். அதன்படி இன்று நான்கு மணிக்கு அறிவிப்பு வெளியானது.

Announcement on vijay's mersal movie

அதன்படி, 'மெர்சல்' படத்தின் 'நீதானே...' எனத் தொடங்கும் மெலடி பாடல் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் காட்சியில் விஜய்யும், சமந்தாவும் வருவார்கள் எனத் தெரிகிறது.

English summary
Mersal is vijay's 61st movie directed by atlee. Neethaanae single track will be release on august 17.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil