»   »  ஒரு வார்த்தை கேட்க பல வருஷமா காத்திருக்கும் முருகதாஸ்: என்ன தல?

ஒரு வார்த்தை கேட்க பல வருஷமா காத்திருக்கும் முருகதாஸ்: என்ன தல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் அழைத்தால் நாளைக்கே ஷூட்டிங்கிற்கு செல்ல தயாராக உள்ளதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங்கை வைத்து ஸ்பைடர் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படத்தை அடுத்து மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ்.

AR Murugadoss is ready to direct Ajith

முருகதாஸுக்கு அஜீத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அந்த ஆசை இன்று வரை நிறைவேறவில்லை. விவேகம் படத்தை அடுத்து அஜீத் மீண்டும் சிவா இயக்கத்திலேயே நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜீத் மட்டும் தனக்கு சம்மதம் தெரிவித்தால் நாளைக்கே படப்பிடிப்பை துவங்கிவிட தயாராக உள்ளதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். அஜீத்துக்கான கதை தயாராக உள்ளதாம்.

முருகதாஸும் தனது ஆசையை பலமுறை தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
AR Murugadoss said that he is ready to start the shooting immediately the moment Ajith says YES to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil