»   »  அட்லி படத்தில் விஜய் - ஏ ஆர் ரஹ்மான் - காஜல்?

அட்லி படத்தில் விஜய் - ஏ ஆர் ரஹ்மான் - காஜல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் அடுத்த பட இயக்குநர்கள் என்று கிட்டத்தட்ட அரை டஜன் பெயர்களைக் கூறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், அட்லீ, ரஞ்சித் எல்லாம் அந்த அரை டஜனுக்குள் அடங்கும்.

இந்த சூழலில் பரதன் இயக்கும் பைரவா முடிந்ததும் அடுத்து அட்லி இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப் போகிறார் என்று கற்பூரமடிக்காத குறையாகச் சொல்கிறார்கள்.

Atlee to Direct Vijay's 61st?

அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பெயர் கூட கசிந்துவிட்டது.

துப்பாக்கி, ஜில்லாவில் ஜோடிபோட்ட காஜல்தான் நாயகி என்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கப் போகிறாராம். ஏற்கனவே உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய விஜய் படங்களுக்கு இசை ஏ ஆர் ரஹ்மான்தான்.

விரைவில் அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல்களை அறிவிக்கப் போகிறார்களாம்.

English summary
Reports suggest that the director of Vijay's 61st movie is Atlee and AR Rahman is the composer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil