»   »  விஜய் படத்தில் இன்னொரு தெறி பேபி!

விஜய் படத்தில் இன்னொரு தெறி பேபி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தெறி படத்தில் தெறிக்க விட்ட பேபி நைனிகாவைத் தொடர்ந்து இன்னொரு பேபி நடிகை விஜய்யுடன் கலக்க வருகிறார். விஜய்யின் 60வது படத்தில் அவருடன் இணைந்துள்ளார் பேபி மோனிகா சிவா.

6 வயதான மோனிகா சிவா, மலையாளத்தில் வெளியான சங்குச்சக்கரம் என்ற படத்தில் கலக்கியவர் ஆவார். இப்போது விஜய் படத்தில் இணைந்துள்ளார்.


இப்படத்தில் இவர் யாரா நடிக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.


அது சீக்ரெட்...

விஜய்யின் மகளா நடிக்கிறீங்களா பாப்பா என்று கேட்டால் நோ நோ அதெல்லாம் சொல்லப்படாது என்று கூறி ஓடி விடுகிறாராம் இந்த பேபி.
குட்டிக்கை நிறைய படங்கள்...

குட்டிக்கை நிறைய படங்கள்...

இந்த பேபி மோனிகா சிவா, விஜய் படம் தவிர கட்டப்பாவை காணோம், சித்தார்த் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறாராம். விஜய் படத்தில் இந்தக் குட்டிப் பாப்பா அவரது மகளாக நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

காரணம், தெறி படத்தில் விஜய்யும், மீனாவின் மகள் நைனிகாவும் சேர்ந்து கலக்கி அது பெரும் வெற்றி பெற்றதால் இந்தப் படத்திலும் அப்படி ஒரு அப்பா மகள் கேரக்டர் வருகிறதா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


இதுதான் காரணம்...

இதுதான் காரணம்...

மேலும் விஜய்க்கு குழந்தைகள் மத்தியில் செம கிரேஸ் உள்ளதால் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரங்களுடன் அவர் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதன் விளைவாகவே மோனிகா சிவாவை படத்தில் சேர்த்துள்ளனராம்.
ஷூட்டிங்...

ஷூட்டிங்...

தற்போது ஹைதராபாத்தில் விஜய் 60 பட ஷூட்டிங் பிசியாக நடந்து வருகிறது. இது 2வது கட்ட படப்பிடிப்பாகும். ஜெகபதி பாபு, சதீஷ், அபர்ணா வினோத் ஆகியோர் இந்த 2வது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.


ஓய்வு...

ஓய்வு...

இதற்கிடையே, இப்படத்தில் தனது பகுதிக்கான ஷூட்டிங் முடிந்ததும் விஜய் அமெரிக்காவுக்குப் பறக்கிறார். அங்கு சில வாரங்கள் தனது குடும்பத்தாருடன் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் விஜய்.


பொங்கல் ரிலீஸ்...

பொங்கல் ரிலீஸ்...

விஜய் 60 பட ஷூட்டிங் கடந்த மே மாதம் தொடங்கியது. ஏப்ரல் 11ம் தேதி பூஜை போட்டனர். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டஉள்ளது.


கபாலி...

கபாலி...

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கிறார். 2வது ஜோடியாக வருகிறார் அபர்ணாவினோத். பெரும் நட்சத்திரப்ப ட்டாளமும் படத்தில் இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கபாலி இசைக்குப் பிறகு இவர் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.


English summary
Monica Siva is the latest addition to the cast of Ilayathalapathy's next movie, which is currently being referred to as "Vijay 60." The six-year-old child artiste will reportedly play the role of the heroine's niece in the upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil