பீஸ்ட் மலையாளம், கன்னடம் டிரைலர் வந்தாச்சு...கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : தமிழை தொடர்ந்து விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இதனால் இவற்றின் சாதனையை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பீஸ்ட் படத்தின் ரிலீசை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

5 மொழிகளில் பீஸ்ட்

5 மொழிகளில் பீஸ்ட்

பான் இந்தியன் படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மற்ற மொழிகளில் பீஸ்ட் என்ற பெயரிலும் இந்தியில் மட்டும் ரா என்ற பெயரிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் துவங்கி லேட்டஸ்டாக வெளியிடப்பட்ட பீஸ்ட் டிரைலர் வரை அனைத்தின் சாதனையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அரபிக்குத்து சாதனை

அரபிக்குத்து சாதனை

பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளாக காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட அரபிக்குத்து பாடல் யூட்யூப்பில் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இந்த பாடலும் செம ஹிட்டானது.

பட்டையை கிளப்பிய டிரைலர்

பட்டையை கிளப்பிய டிரைலர்

இந்நிலையில் ஏப்ரல் 2 ம் தேதி பீஸ்ட் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் வெளியிடப்பட்ட 5 நிமிடங்களில் 2 மில்லியன் பார்வைகளை கடந்தது. கடந்த 4 நாட்களில் இந்த டிரைலர் 40 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. பீஸ்ட் டிரைலர் பல படங்களின் காப்பி, படத்தின் கதை இது தான், இதில் பல சொதப்பல்கள் உள்ளது என விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்கள் இந்த டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Beast Jolly O Gymkhana | amara dheepam படத்துலருந்து Copy அடிச்சதா ? | Rewind Raja | Filmibeat Tamil
மற்ற மொழிகளிலும் ஹிட்

மற்ற மொழிகளிலும் ஹிட்

தமிழை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பீஸ்ட் டிரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மலையாளம் மற்றும் கன்னட மொழி டிரைலரும் தொடர்ந்து பார்வைகளை அள்ளி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X