இன்றைக்கு பீஸ்ட் டீசர் அப்டேட் தான் வருது...ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்
சென்னை : இன்று வெளிவர உள்ளதாக சொல்லப்படும் பீஸ்ட் அப்டேட் டீசர் வெளியீடு பற்றியது தானாம். ஆனால் அதை ஒரு ட்விஸ்ட் உடன் வெளியிட போகிறார்களாம்.
பீஸ்ட் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் கிட்டதட்ட சோர்ந்து விட்டார்கள். பீஸ்ட் படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவராத நிலையில், அதிகாரமற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் பல விஷயங்களை ரசிகர்களை அதிர்ச்சியும், குழப்பமும் அடைய வைத்துள்ளன.
விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாகும் என அறிவித்து விட்டார்கள். இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதவரை டீசர், மோஷன் போஸ்டர், க்ளிம்ப்ஸ், டிரைலர், ப்ரொமோஷன் என எதுவும் வரவில்லை. சன் பிக்சர்ஸ் தொடர்ந்து அமைதி காத்து வருவதால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி, சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக், மீம்ஸ் என போட்டு அதிர வைத்து வருகின்றனர்.

ஒரு வார்த்தையில் குட் நியூஸ்
பீஸ்ட் டீசர் அல்லது டிரைலர் பற்றிய அறிவிப்பு நேற்று வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் அது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதற்கு பதிலாக பீஸ்ட் டைரக்டர் நெல்சன் திலீப்குமார், நாளை என்று மட்டும் ட்விட்டரில் போஸ்ட் போட்டார். நாளை என்றால் அது டீசர் பற்றியதா, டிரைலர் பற்றியதா அல்லது மூன்றாவது சிங்கிள் பற்றியதா. ஒன்றுமே புரியவில்லை என ரசிகர்கள் குழம்பி போயினர்.

பீஸ்ட்டில் ஏன் இத்தனை குழப்பம்
இன்று பீஸ்ட் அறிவிப்பு வருவதாக நெல்சன் கூறிய பிறகும் சன் பிக்சர்ஸ் தற்போது வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் சன் பிக்சர்சிற்கு பதில், வேறு ஒரு தனியார் பத்திரிக்கை பீஸ்ட் படத்தின் விஜய்யின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் அனைவரின் குழப்பமும் அதிகமாவி விட்டது. என்னதாம்ப்பா நடக்கிறது பீஸ்ட் விஷயத்தில், படமே கை மாறி விட்டதா, சம்பந்தமே இல்லாமல் இவர்கள் எதற்காக பீஸ்ட் ஸ்டில் வெளியிடுகிறார்கள், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தானே வெளியிட வேண்டும் என கேட்க துவங்கி விட்டனர்.

பீஸ்ட் டீசர் தான் வருதா
ஆனால் தற்போது கசிந்துள்ள லேட்டஸ்ட் தகவலின் படி, இன்று பீஸ்ட் டீசர் பற்றிய அறிவிப்பு தான் வெளியிடப்பட உள்ளதாம். ஏப்ரல் 1 ம் தேதி பீஸ்ட் டீசரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த டீசரில் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் இருக்குமாம். ஆனாலும் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்து தான் இந்த டீசரை வெளியிட போகிறார்களாம்.
Recommended Video

என்னப்பா இப்படி ஒரு ட்விஸ்ட்
அதாவது இந்த டீசர் முழுவதும் அதிரடி இசை, அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக மட்டுமே இருக்குமாம். ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல் விஜய்யின் வசனங்கள் ஏதும் இருக்காதாம். விஜய்யின் பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் இருந்தாலும் இந்த டீசர் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் கவருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம். விஜய்யின் டயலாக் இல்லை என்றாலும் பரவாயில்லை, பீஸ்ட் டீசர் வந்தா போதும் என கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











