»   »  விஜய்யின் பைரவா... தெறியை மிஞ்சும் வியாபாரம்!

விஜய்யின் பைரவா... தெறியை மிஞ்சும் வியாபாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 60வது படமான பைரவா இதுவரை அவரது படங்கள் விற்காத அளவுக்கு பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளது.

வெளிவந்துள்ள தகவல்களின்படி இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வரை விற்பனையாகியுள்ளதாகத் தெரிகிறது.


Bhairava rights selling for high price

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பைரவா படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதன் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஸ்ரீக்ரீன் புரொடக்‌ஷன் பெற்றுள்ளது.


படத்தை வாங்க தியேட்டர் அதிபர்களிடையே பெரும் போட்டி நிலவுகிறது. இதுவரை விஜய் படங்கள் ரூ 1 - 2 கோடி வரை போன ஏரியாக்களில், இப்போது 3 முதல் 4 கோடி வரை விலை பேசப்பட்டு வருகிறதாம்.


இந்த ஏரியாக்களில் இந்த அளவு தொகை வசூலாகுமா என்ற கணக்கு தெரியாமலேயே விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் நஷ்டம் என்று புலம்பி போராட்டம் நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்கிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.

English summary
Vijay's Bhairava movie theatrical right is selling for high price for the first time in Vijay's career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil