பிக் பாஸ் அல்டிமேட்… இந்த வாரம் டேஞ்சர் சோனில் 3 பேர்… வெளியேறப்போது யார் ?
சென்னை : பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சி 26 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து 5 போட்டியாளர்கள் வெளியேறியதை அடுத்து தற்போது வீட்டில் 9 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் டேஞ்சர் சோனில் இருக்கும் போட்டியாளர்கள் யார், வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வாரத்திலேயே சுரேஷ்சக்கரவர்த்தி வெளியேறினார். அடுத்து சுஜா வெளியேறிய நிலையில், கடந்த வாரம் டபிள் எவிக்ஷனில் ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேறினார்கள். வனிதா தானாகவே வெளியேறிவிட்டார்.

டேஞ்சர் சோனில்
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பாலா, தாமரையை தவிர அனைத்து போட்டியாளர்களும் உள்ளனர். இதில் அதிக வாக்குகளை பெற்று நிரூப் முதலிடத்தில் உள்ளார். ஜூலி, அனிதா, அபிராமி அதிக வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். இந்த வாரம் டேஞ்சர் சோனில் தாடி பாலாஜி, சினேகன், ஸ்ருதி என 3 பேர் உள்ளனர். இதில் ஸ்ருதி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. அவர் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

சிம்பு மாஸ் என்ட்ரி
கமல்ஹாசன் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதால், இந்த வார நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று வெளியான ப்ரோமோவில் சும்மா அட்டகாசமாக சூட்கோட்டில் வந்து எதிர்பார்க்கலல... நானே எதிர்பார்க்கல என மாஸா என்ட்ரி கொடுத்து இருந்தார்.

இன்ப அதிர்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல் வெளியேறியதை அடுத்து ரம்யா கிருஷ்ணன் அல்லது சரத்குமார் வருவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிக் பாக் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால், அல்டிமேட் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூடும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











