நிருபரை கொச்சையாக பேசி மிரட்டிய பாஜக தலைவர் கங்கை அமரன்... ப்ளூ சட்டை மாறன் விளாசல் ட்வீட்!

சென்னை: நிருபரை கொச்சையாக பேசி மிரட்டிய பாஜக தலைவர் கங்கை அமரன் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு விளாசி உள்ளார்.

தனியார் செய்தி நிறுவனமான தமிழ் நியூஸுக்கு கங்கை அமரன் பேட்டி அளித்த நிலையில், நிரூபர் கேட்ட கேள்விக்கு, ஆக்ரோஷப்பட்ட அவர் "டேய்.. வா.. போ.." என அத்துமீறி பேசிய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவனை இழுத்து விட்டு கங்கை அமரன் பேசிய பேச்சுக்கு அரசியல் ரீதியாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

எகிறிய கங்கை அமரன்

எகிறிய கங்கை அமரன்

இளையராஜாவுக்கு பதிலாக நீங்கள் தான் அந்த முன்னுரையை எழுதியதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவுகிறதே என அந்த நிருபர் கேட்டதும் திடீரென ஆக்ரோஷம் அடைந்து விட்டார் கங்கை அமரன். அப்படி பேசுகிறவன் முட்டாள், அறிவு கெட்ட நாய் என கண்ட மேனிக்கு திட்டியதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து கேள்வி கேட்க முயன்ற நிருபரிடம் எகிறினார் கங்கை அமரன்.

நீ வாயை மூடு

நீ வாயை மூடு

அந்த முன்னுரையை படித்திருக்கிறாயா நீ என்றும், ஏய் என்றும் நிருபரை மிரட்டிய கங்கை அமரன். நீ வாயை மூடு.. எனக்கு பதில் சொல்லுடா என வரம்பு மீறி கத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கொஞ்சமும் நிதானம் இல்லாமல் இப்படியா கங்கை அமரன் பேசுவார் என பலரும் அவரை விளாசி வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

"சோஷியல் மீடியாவில் பேசியவன் முட்டாள், அறிவு கெட்ட நாய். ஏய்..நீ வாயை மூடு. எனக்கு பதில் சொல்லுடா - நிருபரை கொச்சையாக பேசி மிரட்டிய பாஜக தலைவர் கங்கை அமரன்." என அந்த வீடியோவையும் ஷேர் செய்து தனது சேட்டையை காட்டி உள்ளார் விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன். ஆர்.கே. நகரில் நடந்த தேர்தலில் கங்கை அமரன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

எதுக்கு இந்த கத்து

எதுக்கு இந்த கத்து

"எதுக்கு இந்த கத்து கத்துது... காது கொய்ங்ணுது..." என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கங்கை அமரனை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ஒரு சில ரசிகர்கள் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜிக்கு டேக் போட்டு, அப்பாவை அமைதியா இருக்க சொல்லுங்கப்பா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Recommended Video

'Vijay Fans தயவுசெஞ்சு அவருக்கு இதை சொல்லுங்க..!'- GangaiAmaran
வாலி பேச்சு

வாலி பேச்சு

ஆரம்ப காலத்தில் கங்கை அமரன் தனது பெயரை அமர் சிங் என வைத்துக் கொண்டு வாலியிடம் உதவியாளராக பணியாற்ற கோரிக்கை வைத்தார் என்றும், பின்னாளில் அவர் தான் கங்கை அமரன் என்பதை அறிந்து கொண்ட வாலி மேடை ஒன்றில் பேசும் போது, அமர் சிங்கா நீ.. அமரு.. சிங்கு என உட்கார்ந்து பாடு என பேசிய ஆடியோவையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X