Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விஜய் படத்தை தயாரிக்க தயார்...ஆனால்....போனி கபூர் சொன்ன அந்த விஷயம்
சென்னை : வரிசையாக அஜித் படங்களை தயாரித்து வரும் போனி கபூர், விஜய் படத்தையும் தயாரிக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முக்கியமான விஷயம் ஒன்று தேவை என தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், Bayview productions என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல பெரிய நடிகர்களின் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார்.
Osaka
tamil
International
film
festival...6
விருதுகளை
வென்ற
சூரரைப்
போற்று

தமிழில் முதல் படம்
தமிழில் முதல் முறையாக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தார். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து செம ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. ஹெச்.வினோத் இயக்கிய இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தார்.

வரிசையாக 3 அஜித் படங்கள்
இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு ரிலீசானாலும் வலிமை படமும் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதனால் செம குஷியான போனி கபூர், அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் ஏகே 61 படத்தை தற்போது தயாரித்து வருகிறார். ஹெச்.வினோத் படம் இயக்கும் முறை, அஜித்தின் ஒத்துழைப்பு, தொடர் வெற்றி காரணமாகவே வரிசையாக அஜித்தின் மூன்று படங்களை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

விஜய் படம் தயாரிக்க மாட்டீங்களா
அஜித் படங்களை மட்டுமே தயாரித்த போனி கபூர், தற்போது உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படம் மே 20 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தியில் வெளிவந்த பிளாக் பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. அஜித்தை தொடர்ந்து உதயநிதி படத்தை போனி கபூர் தயாரித்திருப்பதால், விஜய் படங்களை தயாரிப்பீர்களா என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.

இது இருந்தா தயாரிப்பேன்
இதற்கு பதிலளித்த போனி கபூர், வலிமை படத்திற்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பு எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எந்த குறையுமில்லை. ஏகே 61 படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து செம சூப்பரான லுக்கில் இருக்கிறார். விஜய் படங்களை தயாரிக்க கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நல்ல கதை, நல்ல டைரக்டர் கிடைத்தால் விஜய் படங்களை தயாரிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.