»   »  அப்பாவுக்கு தளபதி, மகனுக்கு ஜெயம் ரவி, சித்தப்புவுக்கு தல: இது மெகா ஃபேமிலி

அப்பாவுக்கு தளபதி, மகனுக்கு ஜெயம் ரவி, சித்தப்புவுக்கு தல: இது மெகா ஃபேமிலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: டோலிவுட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஹீரோக்கள் அஜீத், விஜய் மற்றும் ஜெயம்ரவி ஆகியோரின் படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்கள்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் படுபிசியாக இருந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் ஹீரோவாக நடிக்க வருமாறு ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்கத் துவங்கியுள்ளார்.

கைதி 150

கைதி 150

சிரஞ்சீவி தற்போது ஹீரோவாக நடித்து வரும் படத்தின் பெயர் கைதி 150. இது சிரஞ்சீவியின் 150வது படமாகும். படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

கத்தி ரீமேக்

கத்தி ரீமேக்

கைதி 150 இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான கத்தி படத்தின் ரீமேக் தான். கைதி 150 போஸ்டரே அசத்தலாக உள்ளது. படமும் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரம் ரீமேக்

வீரம் ரீமேக்

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் கட்டமராயுடு படத்தில் நடித்து வருகிறார். இது தல அஜீத் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த வீரம் படத்தின் ரீமேக். கட்டமராயுடுவில் தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்.

தனி ஒருவன் ரீமேக்

தனி ஒருவன் ரீமேக்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவாவில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

மெகா ஃபேமிலி

மெகா ஃபேமிலி

மெகா ஃபேமிலியை சேர்ந்த அப்பா, மகன், சித்தப்பா ஆகிய மூன்று பேர் ஒரே நேரத்தில் தமிழ் படங்களின் ரீமேக்கில் நடித்து வருகிறார்கள். டோலிவுட்டில் சிருவின் குடும்பத்தை மெகா ஃபேமிலி என்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mega family members Chiranjeevi, Ram Charan and Pawan Kalyan are acting in telugu remake of tamil films namely Kaththi, Thani Oruvan and Veeram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil