»   »  விஜய்யின் காக்கி படத்தை பெரிய தொகைக்கு வாங்கிய காஸ்மோ பிலிம்ஸ்

விஜய்யின் காக்கி படத்தை பெரிய தொகைக்கு வாங்கிய காஸ்மோ பிலிம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் காக்கி படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்தனை நாட்கள் விஜய் 59 என்று இருந்த படத்திற்கு தற்போது காக்கி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படம் மூலம் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா. சமந்தா தவிர படத்தில் ஏமி ஜாக்சனும் உள்ளார்.

Cosmo films buys Vijay's Kakki's distribution rights

விஜய் காக்கிச் சட்டை போட்டு நடித்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் இந்த காக்கியும் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்று நம்பப்படுகிறது. படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சிவா பெரிய தொகையை கொடுத்து வாங்கிவிட்டாராம்.

படத்திற்கு பெயரை தேர்வு செய்யும் முன்பே சிவா விநியோக உரிமையை வாங்கிவிட்டாராம். காஸ்மோ பிலிம்ஸ் நிறுவனம் தான் விஜய் நடித்த ஜில்லா, கத்தி, புலி ஆகிய படங்களை வெளியிட்டது. இந்நிலையில் மீண்டும் விஜய்யின் படத்தை வாங்கியுள்ளது.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீனாவின் மகள் நைனிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Cosmo films has bought the distribution rights of Vijay's upcoming movie Kakki being directed by Atlee.
Please Wait while comments are loading...