சரக்கு அடிக்கும் தனுஷ்..காதல்,ரொமான்ஸ் கலந்த..திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் எப்படி இருக்கு?
சென்னை : தனுஷின் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது. காதல், ரொமான்ஸ்,காமெடி கலந்து உருவாகி உள்ள இந்த டிரைலர் எப்படி இருக்கு என்று பார்க்கலாமா?
இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.

திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் தமிழில் கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான மாறன் திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக இவர் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா , ஜூலை 30 ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

ஆகஸ்ட் 18 ரிலீஸ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.

திருச்சிற்றம்பலம் டிரைலர்
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது, டிரைலர் நன்றாக உள்ளதாக ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெலிவரி பாய் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு தாத்தாவாக இயக்குநர் பாரதிராஜாவும், தந்தையாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளார்கள். தோழியாக வரும் நடிகை நித்யா மேனன் கவனம் ஈர்க்கிறார். 2 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடக் கூடிய ட்ரெய்லராக இந்த டிரைலர் வெளியாகி உள்ளது.

காதல்..ரொமான்ஸ்,
பாரதிராஜாவுக்கும் தனுஷூக்கும் படத்தில் 'பழம்' என ஒரே பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுஷிடம், டேய் வரும் போது பீர் வாங்கிட்டு வாடா என சொல்லி அலப்பறை செய்கிறார் பாரதிராஜா. இதையடுத்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து சரக்கு அடிக்கின்றனர். பிரியா பாவனி சங்கர் மற்றும் ராஷிகண்ணாவை எப்படி காதலிப்பது என்று தோழி நித்யா மேனனிடம் ஐடியா கேட்கிறார் தனுஷ். காதல், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு சூப்பரான டிரைலராக இந்த டிரைலர் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











